ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்த பெண் சிங்கங்கள்!

ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்த பெண் சிங்கங்கள்!

கர்னல் ஷோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோம்கா சிங் – ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்து சென்ற இரண்டு பெண் சிங்கங்கள்… இராணுவ அதிகாரிகள்.

ராணுவத்தில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இவர்கள் பெண்கள் என்பதற்காக அந்தப் பொறுப்பில் தேர்ந்தெடுக்கப்படவில்லை, மாறாக அந்தப் பொறுப்பை ஏற்கக்கூடிய திறன்களும் தலைமைப் பண்புகளும் அவர்களிடம் இருந்ததாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

உண்மையான பெண் விடுதலை, முன்னேற்றம் என்றால் இதுதான். ஒரு பெண்ணாக பெருமைப்படுகிறேன். வாழ்த்துகள்!

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் இருவரும் அளித்த விளக்கத்தைப் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் நம் பாரத நாட்டின் பெருமைகளுள் ஒன்று. பாரத நாட்டில் பிறந்தமைக்காக பெருமைப்படுகிறேன்.

நம் நாட்டுக்காகப் போராடும் அத்தனை இராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்கும் பிரார்த்தனை செய்து கொள்வோம்!

பாரத் மாதா கி ஜெய்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 7, 2025 | புதன்

(Visited 1,196 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon