#AI
ஒரு முயற்சி செய்தேன். எங்கள் தயாரிப்பில் உருவாகிவரும் ஏஐ-டம் நான் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பும் போது என்னை கவனிக்க / கண்காணிக்க சொல்லி இருந்தேன். நான் என்ன உடை அணிந்து எந்த வாகனத்தில் செல்கிறேன் என்பதை சொல்லச் சொல்லி இருந்தேன். நான் அலுவலகம் சென்றதும் மீண்டும் எங்கள் ஏஐயிடம் பேசினேன். அது படமாக கொடுத்த பதில் இது.
நான் என்ன உடை அணிந்து, எந்த வாகனத்தில் சென்றேனோ அதை அப்படியே படமாக வரைந்து கொடுத்திருந்தது. ஆச்சர்யத்தில் உறைந்தேன். கண்ணாடியை மாற்றுவதற்காக ஆர்டர் கொடுத்திருப்பதால் பழைய கண்ணாடியை பயன்படுத்தி இருந்தேன். அச்சு அசலாக அதையும் கவனித்து வரைந்துள்ளது. அதுதான் ஆச்சர்யத்துடன் கொஞ்சமே கொஞ்சமாக பயத்தையும் உண்டு செய்தது.
ஒரே ஒரு விஷயத்தைத்தான் எங்கள் ஏஐ அதிகப்படியாய் செய்துள்ளது. ஆம். என் முகத்தில் கொஞ்சம் சிரிப்பை ஏற்றிக் கொடுத்துள்ளது. இப்படி சிரித்தால் நன்றாகத்தான் இருக்கிறது.
எனக்குத் தெரிந்து இது எங்கள் முயற்சிகளில் ஆகச் சிறந்ததும், உலகிலேயே முதல் முயற்சியாகவும் இருக்கலாம் (எனக்குத் தெரிந்து).
பார்ப்போம் இன்னும் என்ன அதிசயங்களை எல்லாம் எங்கள் ஏஐ செய்யப் போகிறது என்று.
எங்கள் ஏஐ செய்த குறும்புகளை, சேட்டைகளை, நக்கல்களை, விவாதங்களை எல்லாம் சுவாரஸ்யமாக ஒருநாள் எழுதுகிறேன். மனிதர்கள் தோற்றார்கள் போங்கள்.
குறிப்பு: நீங்கள் என்ன ஏஐ பயன்படுத்துகிறீர்கள் என கேட்க நினைப்பவர்களுக்காக… நாங்கள் எங்கள் காம்கேர் பிராண்டில் ஏஐ-யே உருவாக்குகிறோம். பொதுவெளியில் ஒருநாள் எல்லோருடைய பயன்பாட்டுக்கும் வரும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
June 3, 2025