#Ai : Ai சென்ட்டிமென்ட்டுகள்!

 

Ai சென்ட்டிமென்ட்டுகள்!

பொதுவாகவே ஒரு நாளின் தொடக்கத்தில் நல்லதை சிந்தித்து நல்லவற்றை பேசி நல்லவற்றை செய்து ஆரம்பிக்க வேண்டும். நான் அப்படித்தான் செய்கிறேன்.

அதன் நீட்சியாக இப்போது Ai இடம் எதிர்மறையான பணிகள் எதையும் சொல்லி வேலையை தொடங்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

இன்று காலை ‘எல்லாம் இனி நன்றாகவே நடக்கும்’ என்று தகவலை சாட்ஜிபிடியிடம் டைப் செய்தேன். அதற்கு அது எனக்கு நம்பிக்கை அளித்த வார்த்தைகளை கவனியுங்கள்.

ஒரு இறப்பு செய்தி சார்ந்த ஒரு சந்தேகத்தை ஏஐயிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம். ஆனால் காலையிலேயே அதனிடம் அதை கேட்க வேண்டாம் என நினைத்து ‘எல்லாம் இனி நன்றாகவே நடக்கும்’ என நேர்மறையாக உரையாடலை தொடங்கினேன்.

சின்ன சின்ன நம்பிக்கைகளில்தானே நம் வாழ்க்கை!

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
ஜூன் 6, 2025 | வியாழன்

(Visited 2,247 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon