தமிழ் இலக்கிய ஆன்மிக வரலாற்றில் முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தில் திருவாசகம் CD – ஸ்ரீ ஜயேந்திரர் (February 11,2004)

எங்கள் காம்கேர் நிறுவனம் வடிவமைத்த ‘திருவாசகம்’ மல்டிமீடியா சிடியை தி.நகர் வாணி மஹாலில் பிப்ரவரி 11, 2004 –ம் தேதி,   ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் பீடாரோஹண ஸ்வர்ண ஜயந்தியினை முன்னிட்டு  வெளியிட்டோம்.

தமிழ் இலக்கிய ஆன்மிக வரலாற்றில் முதல் முறையாக புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட திருவாசகம் மல்டிமீடியா சிடியை  வர்த்தமானன் மல்டிமீடியா நிறுவனத்தின் முன்னெடுப்பில் எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பில் மூலம் பிரமாண்டமாக உருவாக்கி இருந்தோம்.

51 பதிகங்கள், 649 பாடல்களையும் திருத்தணி சுவாமிநாதன் அவர்கள் குரலில் பாட, பாடல் வரிகளுடன், பதிக விளக்கங்களுடன்  பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் விதத்தில் மல்டிமீடியா சிடியாக நாங்கள் வடிவமைத்த திருவாசகம் சிடியை ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் கைகளால் வெளியிட்டு ஆசி பெற்றோம்.

நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பிற்கு…இங்கே கிளிக் செய்யவும்!

திருவாசகம் சிடி உருவாக்கம்!

2003-ம் ஆண்டே, கூகுள் போன்ற சர்ச் இஞ்சின்கள் பிரபலமாவதற்கு முன்பே மல்டிமீடியாவில் Search Option வைத்து திருவாசகத்தின் 658 பாடல்களையும் Text, Audio, Video என முழுமையாக வடிவமைத்தோம்.

658 பாடல்களின் மூலம் ஒருபுறம், அதன் எதிர்புறம் தமிழில் எளிய உரை. அதுபோல மூலம் ஒருபக்கம், எதிர்புறம் ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கிய மொழியாக்கம் என தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையை புரிந்துகொள்ளும் வசதிகளை இணைத்திருந்தோம்.

இதன் மற்றொரு சிறப்பு, பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் மிக எளிதாக பயன்படுத்தும் வகையில் வசதிகளை இணைத்திருந்தோம்.

ஓரெழுத்து, ஒரு வார்த்தை, ஒரு வரி என எதைக் கொடுத்துத் தேடினாலும் நொடிப் பொழுதில் தேடி எடுத்து நம் கண் முன் காட்டும் அதிசயத்தை கொண்டு வந்திருந்தோம்.

கூகுளையே அறிந்திராவதற்களுக்கு நாங்கள் காட்டிய Search எனப்படும் ‘தேடும் வசதி’ ஆஹா-ஓஹோ-அற்புதம்-அதிசயம் தானே?

அதன் பின்னால் உள்ள வெறித்தனமான உழைப்பும் கண்மண் தெரியாத ஈடுபாடும் அப்பப்பா பிரமிப்புதான். காலையில் கண் விழிப்பது முதல் இரவு உறங்கும் வரை திருவாசகம் புத்தகங்களுடனும், திருவாசகம் படைப்பிற்காக ரெகார்ட் செய்த ஆடியோவை கேட்டபடியும்தான் பித்துப் பிடித்ததைப்போல் அலைந்து கொண்டிருந்தேன். சாதாரணமாகவே கனவிலும் லாஜிக்தான் வரும். திருவாசகம் ப்ராஜெக்ட் ஆரம்பித்த பிறகு திருவாசகமும், அந்த ப்ராஜெக்ட்டின் லாஜிக்குகள்தான் நாடி நரம்பெல்லாம்.

எங்கள் நிறுவனமே மூன்று நான்கு மாதங்கள் திருத்தணி என். சுவாமிநாதன் அவர்களின் குரலில் திருவாசகத்தின் பாடல்களால் இறைசக்தியால் மெருகேறிக்கொண்டிருந்த காலகட்டம்.

நான்கு மாதங்கள் தொடர் யாகம் செய்ததைப் போல எங்கள் நிறுவனமே இறைசக்தியால் பரவசமாக இருந்ததை அந்த காலக்கட்டத்தில் எங்களுடன் பணியில் இருந்தவர்கள் அறிவார்கள்.

‘தமிழ் இலக்கிய ஆன்மிக வரலாற்றில் முதன் முறையாக… புதிய தொழில்நுட்பத்தில் மல்டிமீடியா சியில் திருவாசகம்!’ என இந்த ஊர் உலகமே கொண்டாடி கெளரவித்ததை மறக்கவே முடியாது.

ஈசனின் இறை அருளால், தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுமையும் பரவி உலகளாவிய முறையில் எங்கள் காம்கேரின் மல்டிமீடியா தயாரிப்புகள் சென்று சேர்வதற்கு திருவாசகம் உதவியது.

-காம்கேர் கே.புவனேஸ்வரி
பிப்ரவரி 11, 2004

(Visited 126 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon