2000- ல் ஒருநாள் விகடனில் ஒரு பிராஜெக்ட்டுக்காகச் சென்றிருந்தேன். அப்போது அவள் விகடனில் இருந்து நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார்கள்.
வழக்கம்போல வெகு சீரியஸாக நான் பேசிக்கொண்டிருக்க, என்னை பொன் காசிராஜன் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்… தயாமலர் அவர்கள் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்…
அப்போது லோகநாயகி மேடம் (இப்போது குமுதம் சிநேகிதியின் எடிட்டர்) சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவிருக்கிறது. ‘கொஞ்சம் சிரிக்கலாம் புவனேஸ்வரி… ஏன் சீரியஸா இருக்கீங்க…’ என்று சொன்னதும் என்னைச் சுற்றி இருந்தவர்கள் சிரித்து விட்டார்கள். நான் புகைப்படத்துக்காக என் சீரியஸ் சிந்தனைகளில் இருந்து வெளியே வந்து சிரிக்க சில நொடிகள் ஆனது.
ஒவ்வொரு புகைப்படமும் எத்தனை வருட நினைவுகளை சுமந்துகொண்டிருக்கிறது…
பேட்டியில் ‘புவனேஸ்வரி சென்னையில் சொந்தமாக காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்துகிறார்’ என்பதற்கு பதிலாக ‘புவனேஸ்வரி சென்னையில் சொந்தமாக காம்கேர் கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் பயிற்சி மையம் நடத்துகிறார்…’ என தவறாக வந்துவிட்டது. அது எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.
ஆனாலும் 2000 – களில் விகடன் குழுமத்தில் சின்னதும் பெரியதுமாக சில நேர்காணல்கள் காம்கேர் குறித்து வந்துள்ளன. அவற்றுள் அவள் விகடனில் வந்த இந்த நேர்காணலும் ஒன்று.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
நவம்பர் 19, 2018
அவள் விகடன் மார்ச் 2000 இதழில் வெளியான என் நேர்காணல்