காம்கேர் 26 (அக் 18, 2018)

எங்கள் காம்கேர் (Compcare Software Private Limited) மூலம் தொழில்நுட்பத்தில் பல முதன் முயற்சிகளில் ஈடுபட வைத்து அவை வெற்றிபெற உதவிய சரஸ்வதி தேவிக்கு நன்றி சொல்லும் பதிவு…

1992-2018 வரை காம்கேர்…

இன்று 26-ம் ஆண்டில் வெற்றிகரமாக…

இதுபோன்ற ஒரு சரஸ்வதி பூஜை தினத்தன்று 1992-ம் ஆண்டு கல்வி-உழைப்பு-திறமை என்ற மூன்றை மட்டுமே மூலதனமாகப் போட்டு தொடங்கப்பட்ட நிறுவனம் எங்கள் காம்கேர்…

காம்கேரின் ஆரம்ப கால பணியே தமிழ் எழுத்துருக்களை கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் முயற்சியே…

எங்கள் இண்ட்ராநெட்டுக்குள்ளும், அலுவலக தனி கம்ப்யூட்டருக்குள்ளும் நாங்கள் எங்கள் எழுத்துருவையே பயன்படுத்தினோம்.

அதே காலகட்டத்தில் ஓவியங்களையும், கார்டூன்களையும் C, C++ மொழியில் வரைந்து மிகப்பெரிய நுணுக்கத்தை அறிமுகப்படுத்தினோம்.

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்த என் தங்கை நல்ல ஓவியர், எம்.சி.ஏ படித்த என் தம்பி கார்ட்டூனிஸ்ட் என்பதால் அந்த முயற்சியையும் விடவில்லை….டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கூட நாங்கள் C, C++ மொழியில் வரைந்த கார்ட்டூனை ஸ்கிரீன் சேவர் போல செயல்படுத்தியிருக்கிறோம்.

அப்போது கம்ப்யூட்டரையும் தமிழையும் கார்ட்டூனையும் இணைத்த முதல் தொழில்நுட்ப வல்லுநர் என்றெல்லாம் அவார்ட்டு கூட கிடைத்தது.

இப்படியாக நிறைய R & D செய்து சாஃப்ட்வேர் தயாரிப்பில் காம்கேரை பிராண்ட் ஆக்கினோம்.

இப்படியாக…

முதன்முதலில் தமிழையும், சாஃப்ட்வேரையும் இணைத்த முயற்சியில் வெற்றி பெற்றோம்…

முதன்முதலில் அனிமேஷன் சிடிக்களை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தோம்…(1999-களில் மற்ற நிறுவனங்கள் 300-500 வரை விற்றுக்கொண்டிருந்தபோது நாங்கள் 99 ரூபாய்க்கு விற்று விற்பனையில் சாதனை செய்தோம்.)

முதன்முதலில் தமிழில் தொழில்நுட்பம் /கல்வி சம்மந்தப்பட்ட கம்ப்யூட்டர் புத்தகங்களை எழுதி வெளியிடத்தொடங்கினோம்…(1992 – ல் இருந்து)

அழகான தமிழில் அதிகமான கம்ப்யூட்டர் / தொழில்நுட்ப நூல்களை எழுதி வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற சமூக அங்கீகராம்…

பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கல்லூரிகளில் பாடதிட்டமாக வைக்கும் அளவுக்கு தொழில்நுட்ப ஆராய்ச்சி நூல்களை பதிப்பித்த நிறுவனம்…

முதன்முதலில் தமிழில் கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்தி நிறுவனம்…

முதன்முதலில் தொழில்நுட்ப தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திய நிறுவனம் (பொதிகை மற்றும் ஜெயா டிவியில் 5 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளியும்…)

இப்படி பல முதன் முயற்சிகளில் ஈடுபட வைத்து அவை வெற்றிபெற உதவிய சரஸ்வதி தேவிக்கும்,

உறுதுணையாக இருந்து என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கும்,

என் அனைத்து முயற்சிகளுக்கும் கூடவே இருந்து எல்லா விதங்களிலும் சப்போர்ட் செய்யும் என் அப்பா அம்மாவுக்கும்,

தொலைவில் இருந்தாலும் அன்றாட தொழில்நுட்ப நிகழ்வுகளை எனக்கு பகிர்ந்து என்னுடனேயே அவர்கள் இருப்பதைப் போன்ற உணர்வைக்கொடுக்கும் என் சகோதரி சகோதரருக்கும்,

கல்வித்துறையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்திலேயே (1987-1992)  B.Sc., மற்றும் M.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து, இடையில் MBA பட்டமும் பெற்று எங்கள்  காம்கேர் நிறுவனம் மூலம் தொழில்நுட்பத் துறைக்கு அறிமுகமான என்னை என் திறமையின் வாயிலாக மட்டுமே அங்கீகாரம் கொடுத்து வெளி உலகுக்கு அறிமுகப்படுத்திய அனைத்து பல்கலைக்கழகம் – பதிப்பகம் – பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி – வானொலி – இணையம்  உட்பட அனைத்து ஊடகங்களுக்கும்

இந்த இனிய தினத்தில் என் அன்பும் நன்றியும்.

1992-ம் வருடம் தொடங்கி இப்போது வரை கடந்த 26 வருடங்களாக… இந்த நெடும் பயணத்தில்… காம்கேரில் என்னுடன் இணைந்து பயணித்த / பயணித்து வருபவர்களுடன் சிறிய Flash Back.

விருப்பம் உள்ளவர்களுக்காக இந்த ஆல்பம்…

http://compcarebhuvaneswari.com/?p=1816

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
அக்டோபர் 18, 2018

குறிப்பு

எங்கள் காம்கேர்  சாஃப்ட்வேர்கள், அனிமேஷன்கள், ஆப்ஸ், ஆவணப்படங்கள், இ-புத்தகங்கள் (அச்சுப் புத்தகங்களும் தேவைக்கு ஏற்ப) தயாரிக்கும் நிறுவனம்.

காம்கேரில் தமிழுக்காக நிறைய செய்துள்ளோம் என்பதால் தமிழில் மட்டுமே செய்கிறோம் என்று அர்த்தமில்லை.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் எங்கள் பல படைப்புகள் வெற்றி பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் கும்பகோணம் மஹாமகத்துக்காக வடிவமைத்த வெப்சைட் பரவலாக பிரபலமானது.

கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் பிரபலமாகாத 1992-களில் சாதி, மதம் இன, மொழி வேறுபாடின்றி எங்கெல்லாம் தொழில்நுட்பத் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்தோம்.

இப்போதும் தொடர்கிறோம்.

இதற்கு ஆதரவளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி…

(Visited 74 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon