ராஜம் மாத இதழில் ‘அம்மா பொய் சொல்கிறாள்’!
கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில்…
முதலில் லே அவுட் ஆன கதை கலைமகளில் ‘வேரை விரும்பாத விழுதுகள்’.
இரண்டாவதாக சாவியில் பரிசு பெற்ற கதை ‘நியதிகள் மாறலாம்’
மூன்றாவதாக நேற்று லே அவுட் ஆன கதை ‘மயக்கம்’.
நான்காவதாக நேற்று லே அவுட் ஆன கதை ‘அம்மா பொய் சொல்கிறாள்’
இந்தக் கதை ஆகஸ்ட் 1990-ஆம் ஆண்டு ராஜம் பத்திரிகையில் வெளியானது.
அப்போது எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு மயிலாடுதுறை AVC கல்லூரியில் அட்மிஷன் ஆன புதிது.
எல்லா படைப்புகளும் அந்தந்த காலகட்டதின் கண்ணாடியாக இருக்கின்றன என்பதை அந்த கதையை படித்தபோது உணர முடிந்தது.
1990-ம் ஆண்டு என் படைப்பை அங்கீகரித்து பிரசுரம் செய்தவர் திருமிகு. சந்திரா ராஜசேகர். அவர்தான் அப்போது ராஜம் பத்திரிகையின் எடிட்டராக இருந்தார்.
இந்தக் கதைக்கு நான் வைத்துள்ள ‘அம்மா பொய் சொல்கிறாள்’ என்ற தலைப்பு குறித்து, ‘தலைப்பு கொஞ்சம் நெருடலாக இருக்கிறதே… அம்மா பொய் சொல்வாரா… வேறு மாற்றி விடலாமா?’ என்று கேட்டு தன் கைப்பட கடிதம் எழுதி இருந்தார் அவர்.
அதற்கு நான், ‘அந்தக் கதையே சிறுமியின் பார்வையில்தான் செல்கிறது… அந்தச் சிறுமியைப் பொறுத்தவரை அம்மா பொய் சொல்வதாகவேபடுகிறது… எனவே மாற்ற வேண்டாம்’ என சொல்லி கடிதம் எழுதி இருந்தேன்.
அவரும் அதற்கு மதிப்பளித்து அதே தலைப்பையே வைத்து பப்ளிஷ் செய்தார்.
‘பேரண்டிங்’ குறித்த கதை அது. ராஜத்தில் வெளியான அந்த படைப்பு உங்கள் பார்வைக்கு. நேரம் இருப்பவர்கள் படித்துப் பார்க்கலாம்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
நவம்பர் 18, 2018
Click the following Link
ஆக்ஸ்ட் 1990 -ல் ராஜம் இதழில் வெளியான ‘அம்மா பொய் சொல்கிறாள்’ கதையை படிக்க…