திரு ரமணன் அவர்கள் எழுதிய THE JOURNEY – FUELLED BY DETERMINATION என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
தொழில் துவங்க விரும்பும் எவருக்கும் அந்த மனிதரின் வாழ்க்கை ஒரு பாடமாகயிருக்கும் இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்ததில் ஆச்சர்யமில்லையே…
எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து கம்ப்யூட்டர் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்த மிக ஆரம்பக் காலகட்டத்திலேயே (1992) காம்கேர் என்ற நிறுவனத்தைத்தொடங்கி சாதி, மதம் இன, மொழி வேறுபாடின்றி எங்கெல்லாம் தொழில்நுட்பத் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்தோம். இன்றும் அதைத் தொடர்ந்து செய்கிறோம்.
First Generation Business Women என்ற முறையில், கடந்த 26 ஆண்டுகளாக ஆண்களே கோலோச்சும் தொழில்நுட்ப பிசினஸ் உலகில் எனக்கென தனியிடம் பிடித்து காம்கேர் என்பதை என் தனிப்பட்ட பிராண்டாக உருவாக்கி வளர்த்தெடுத்துள்ளதால்,
THE JOURNEY – FUELLED BY DETERMINATION என்ற தலைப்பே இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தைத் தூண்டியது.
இனி திரு. ரமணன் அவர்கள் வார்த்தைகளில் இந்தப் புத்தகம் குறித்து…
//ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து கல்லூரியில் கணிதம் படித்து கிடைத்த ஆசிரியர் வேலையை ஒதுக்கி தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்ட அதில் மிக உறுதியாக நின்று தொடர்ந்து பல்வேறு தொழில்களைத் துவங்கி உயரங்களையும் துயரங்களையும் சந்தித்த ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணக் கதைதான் இந்தப் புத்தகம்.
மன உறுதியாலும் துணிவினால் மட்டுமே உந்தப்பட்ட. இந்தப் பயணத்தில் தன் தொழில் வெற்றிக்காக தான் நம்பிய விழுமியங்களை கைவிடாது போராடி வெற்றிபெற்ற அந்த மனிதன் தான் சேர்த்த செல்வத்தை சமூகத்தின் தேவைகளுக்காக பகிர்ந்துகொள்வதை தன் கடமை என எண்ணியவர்
அவர் இறுதியாகத்துவங்கிய super Auto forge என்ற நிறுவனம் இன்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை, பெருமளவில் அன்னிய செலவாணி ஈட்டும் என ஆலமரமாகியிருக்கிறது. அவரது அடுத்த தலைமுறையினர் அதன் விழுதுகளை வலுவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
தொழில் துவங்க விரும்பும் எவருக்கும் அந்த மனிதரின் வாழ்க்கை ஒரு பாடமாகயிருக்கும் என்பதால் அவரின் வாழ்க்கை கதையை THE JOURNEY – FUELLED BY DETERMINATION என்று ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதியிருக்கிறேன்.//
வாய்ப்பிருப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்கலாம்…. இளைஞர்களுக்கு பரிசளிக்கவும் செய்யலாம்.
வாழ்த்துக்கள் ரமணன் சார்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 4, 2019