நூலைப் போல சேலை!

நூலைப் போலத் தானே சேலை!

‘கல்வெட்டுகளை ஆய்ந்த கல்வியாளர்’ என்ற தலைப்பில் தமிழறிஞர் ‘செந்தமிழ் கலாநிதி’ கா.ம. வேங்கடராமையா அவர்களைப் பற்றி அவரது புதல்வர் புலவர் ‘வே மகாதேவன்’ அவர்களுடன் முனைவர் ‘வ.வே.சு.’ உரையாடும் இணையரங்கம் ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்ச்சியின் 56 ஆவது அமர்வாக நேற்று (பிப்ரவரி 7, 2019) நடைபெற்றது.

புலவர் மகாதேவன், முனைவர் வ.வே.சு, எழுத்தாளர் திரு. ரமணன் என மதிப்புக்குரிய பெரியோர்கள் என்னை நிகழ்ச்சிக்கு வரும்படி அன்புடன் அழைத்தும் தவிர்க்க முடியாத பணியினால் கலந்துகொள்ள இயலவில்லை.

நானும் முனைவர் வ.வே.சு அவர்களும் சில கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு பேராசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தி இருக்கிறோம்.

எழுத்தாளர் ரமணன் அவர்கள் நான் எழுதுகின்ற அனைத்து படைப்புகளையும் அச்சு புத்தகங்களிலும், ஆன்லைன் பத்திரிகைகளிலும் படித்து உடனுக்குடன் எனக்கு பாராட்டு தெரிவித்து என்னை ஊக்கப்படுத்தி வருபவர்.

கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக புலவர் மகாதேவன் அவர்களுடன் இணைந்து தமிழ் சார்ந்த பல பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.

அவற்றில் குறிப்பிடும்படியாக சிலவற்றை சொல்கிறேன். இதுபோல இன்னும் ஏராளமான சேவைகளை செய்து வருகிறார். புதுமையாக பல முயற்சிகளை தைரியமாக செய்துபார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்.

இவரது தந்தை திரு. வேங்கட்ராமையா அவர்களுக்காக 2010-ல் வெப்சைட் வடிவமைத்தோம். Venkataramiah.org.

இந்த வெப்சைட் திறப்பு விழாவின் வீடியோ லிங்க்: https://venkataramiah.blogspot.com/p/blog-page_32.html

இப்போது அது பிளாக் வடிவில் மெயிண்டெயின் செய்யப்படுகிறது. https://venkataramiah.blogspot.com/

—-

திருப்பனந்தாள் கோயிலுக்காக 2011-ல் வெப்சைட் வடிவமைத்துக்கொடுத்தேன். thiruppanandal.com.

திருப்பனந்தாளில் மதிப்புக்குரிய மடாதிபதிகள் மற்றும் 3000 பக்தர்களின் முன்னிலையில் அதன் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து என்னையும் பெருமைப்படுத்தி கெளரவித்தார்.

இப்போது இது பிளாக் வடிவில் மெயிண்டெயின் செய்யப்படுகிறது. https://thiruppanandal.blogspot.com/

—-

கும்பகோணம் மகாமகத்துக்காகவே 2016-ல் மகாமகமகிமை என்ற வெப்சைட்டை (mahamahamahimai.org)  தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் வடிவமைத்துக் கொடுத்தேன்.

திரு. இல. கணேசன் அவர்கள் தலைமையில் சென்னை வாணி மஹாலில் அந்த வெப்சைட் திறப்புவிழா நடைபெற்றது.

—-

கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்ய வேண்டிய முயற்சிகளை எல்லாம் தனி ஒருவராக முனைந்து தன் சொந்த செலவில் செய்து வருகிறார்.

யாரிடமும் டொனேஷன், ஸ்பான்ஸர் பெறாமல் இவர் தன் பென்ஷன் தொகையில் தமிழுக்காக ஒரு பகுதியை ஒதுக்கி சேவை செய்து, நூலைப் போலத்தானே சேலையும் இருக்க முடியும் என்ற பேருண்மையை நிரூபித்து வருகிறார் புலவர் மகாதேவன் அவர்கள்.

தமிழால் தன்னை வளர்த்துக் கொள்ளாமல் உண்மையிலேயே தமிழை வளர்த்தவர் புலவர் மகாதேவன் அவர்களின் தந்தை திரு. கா.ம. வேங்கடராமையா அவர்கள்.

அவரால் வளர்க்கப்பட்ட புலவர் வேறெப்படி இருப்பார்?

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் வெப்சைட்டுகளை நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் தன் சொந்த செலவில் வருடாந்திர பராமரிப்புக்காக செலவழித்து வந்தவர் சென்ற வருடம்தான் அவற்றை பிளாகாக மாற்றினால் அதற்கு செலவழிக்கும் பணத்தை இன்னும் பல புதிய முயற்சிகளுக்குப் பயனபடுத்தலாமே என்று நான் கொடுத்த ஆலோசனையின்பேரில் அவரது வெப்சைட்டுகள் அனைத்தையும் Blog ஆக மாற்றிக்கொடுத்தேன்.

இவரது சகோதரர் பேராசிரியர் பசுபதி அவர்கள் மற்றும் இவரது அனைத்து சகோதரிகளும் என்னுடன் மிக அன்புடன் பழகக்கூடியவர்கள். புலவர் மகாதேவன் நடத்துகின்ற அத்தனை நிகழ்ச்சிகளிலும் தொழில்நுட்பம் சார்ந்து என்  பங்களிப்பும் ஏதேனும் ஒருவகையில் இருக்கும் என்பதால் இவரது குடும்பம் முழுவதையும் சந்திக்கும் வாய்ப்பும் அவ்வப்பொழுது கிடைத்து வருகிறது.

புலவர் மகாதேவனின் உழைப்பும் அர்பணிப்பும் வியக்கத்தக்கது. இவருடன் இணைந்து தமிழுக்காக பணிசெய்வதில் பெருமைப்படுகிறேன்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited

பிப்ரவரி 8, 2019

(Visited 126 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon