வலம் இதழ்…
முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில்…. மிக அழகான ஃபாண்டில்… எல்லா வயதினரும் படிக்கும் ஃபாண்ட் சைஸில்… அசத்தலான லேஅவுட்.
எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே ஆழமான கருத்துக்களை அழகான தமிழில் எளிமையான நடையில் கொடுக்கிறார்கள். தமிழும், நடையும் அற்புதம்.
கதை, கட்டுரை, அரசியல், கார்ட்டூன், பயண அனுபவங்கள், ஆன்மிகம் என அத்தனையும் கிளாஸிக்.
குறிப்பாக ஏப்ரல் 2019 இதழில்…
ஆர்.எஸ்.எஸ். ஊழியர் தஞ்சாவூர் ராமரத்தினம் பேட்டி( சுப்பு – கரிகாலன்),
2019 தேர்தல் – பாயத் தயாராகும் மௌன வெள்ளம்(சாணக்யா), ஐநாவில் நிரந்தர இடமும் நேருவும்(தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்), சு.வெங்கடேசனின் உரையும் மறுப்பும்( ஜனனி ரமேஷ்),
கைபேசியை விவாகரத்து செய்யுங்கள்( ரஞ்சனி நாராயணன்), நியூஸிலாந்து மசூதிப் படுகொலை(அரவிந்தன் நீலகண்டன்),
ஓலைப் பத்திரக் கதைகள்(சுஜாதா தேசிகன்)
வெப்பம் (சிறுகதை)(ஸிந்துஜா),
அஞ்சலி: மனோகர் பாரிக்கர்
என கட்டுரைகளும், பேட்டியும், கதையும், கார்ட்டூனும் அருமை.
இவற்றில்…
‘கைபேசியை விவாகரத்து செய்யுங்கள்’ கட்டுரை இன்றைய சூழலுக்கு மிக மிக அவசியமானது.
மேலும் விவரங்களுக்கு http://www.valamonline.in/
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஏப்ரல் 16, 2019