தகவல் கசிவு – ஃபேஸ்புக்கில் நடப்பது என்ன? ‘[1/1]

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து தகவல்களை எடுத்துள்ள குற்றச்சாட்டு  வைரலாகப் பரவி வருகிறது.

உண்மையில் நடந்தது என்ன?

‘If anything is FREE, You are the product’ – என்பது பொதுவிதி.

பொதுவாக கடைகளில் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று விளம்பரத்தைப் பார்க்கும்போது நம் மனசு திறந்திருக்கும். அறிவு மூடியிருக்கும். அதனால்தான் நமக்குள் அந்தப் பொருளை வாங்குவதற்கான உந்துதல்.

அதுபோலவே ஆடித் தள்ளுபடியும்.

ஆடி மாதம் சுப முகூர்த்தம் இல்லாததால் பொதுவாக திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் இருக்காது. அதனால் ஜவுளி வியாபாரம் குறைவாக இருக்கும். அதையே மார்க்கெட்டிங் ஆக்கி ‘ஆடி தள்ளுபடி’ என்று விற்பனை செய்கிறார்கள் சிறிய கடைகளில்கூட. இதனால் தள்ளுபடி கொடுத்து லாபத்தில் குறைந்தாலும் கூடுதல் வியாபாரத்தினால் சுப முகூர்த்த மாதங்களை விட ஆடியில் ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றன. வாடிக்கையாளர்களை அதிகரித்து விற்பனையை பலமடங்காக்கி ஒட்டு மொத்த இலாபத்தை பெறுகிறார்கள்.

இதே நுணுக்கம்தான் சமூக வலைதளங்களிலும்.

ஒருமுறை தேர்தலில் தான் நிற்கப் போவதாகவும், அதற்கு ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அவரைப் பற்றி பாசிடிவாக எழுதி ப்ரமோட் செய்ய முடியுமா… என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டபோது நான் கொஞ்சம் தயங்கினேன். உங்கள் முகமோ, பெயரோ, நிறுவனத்தின் பெயரோ வெளியில் தெரியாது என்று உத்திரவாதம் கொடுத்தார். என் நிறுவனக் கொள்கைகளுக்கு இந்த பிராஜெக்ட் ஒத்துவராததால் அதை ஏற்கவில்லை என்பது வேறு விஷயம்.

இதுவும் ஒருவகை மார்கெட்டிங்.

இதே நுணுக்கத்தைத்தான் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் தேர்தல் ஆலோசனை மையம் என்ற பெயரின் கீழ் இயங்கி, உலகம் முழுதும் தேர்தல் தொடர்பான குழப்பங்களை தீர்க்க ஆலோசனை வழங்கி வெற்றி பெறவும் வழிகாட்டி வருகிறது.

இந்த நிறுவனம் எப்படி ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை பயன்படுத்தியுள்ளது?

தொடரும்…

(குங்குமம் 06-04-2018 இதழில் வெளியான கட்டுரையின் முதல் பகுதி)

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

மே 2, 2019

(Visited 77 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon