ஹலோ With காம்கேர்

ஹலோ with காம்கேர்

நாளை 2020 – ம் ஆண்டின் தொடக்க நாள்.

இன்று  ஜனவரி 1, 2019  அன்று தொடங்கிய  ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவுக்கான 366-வது எபிசோட்.

யாருக்கும் அறிவுரை சொல்லவோ, யாரிடமும் என்னுடைய கருத்துக்களை திணிப்பதற்காகவோ இந்தப் பதிவைத் தொடங்கவில்லை.  இந்தத் தொடர் மூலம் எனக்குத் தெரிந்ததை நான் உணர்ந்ததை நான் பின்பற்றுபவற்றை என் அனுபவங்களை பகிர்ந்து வந்தேன். அவை நேர்மறையாக அமைந்து உங்கள் அனைவரையும் கவர்ந்திருப்பது எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சியே.

இதை ஆர்வத்துடன் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தி வந்த அத்தனை பேருக்கும் நன்றி என்ற ஒரு வார்த்தையில் என் அன்பை வெளிப்படுத்திவிட முடியாதுதான். ஆனாலும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘இ.நா.இ.நா’ தொகுப்புக்கு வாழ்த்துரையாகவே எழுதி அனுப்பியவர்களுக்கு நன்றி. உயர்திரு. ரவி சுப்ரமணியன், திருப்புல்லாணி ரகுவீரதயாள், கிளிக் ரவி, யோகேஸ்வரன் ராமநாதன், கமலா சுந்தரம், என். ரத்னவேல்.

அவ்வப்பொழுது தாங்களாகவே தங்கள் டைம்லைனில்  வாழ்த்தியவர்களுக்கு ‘ஸ்பெஷல்’ நன்றி. உயர்திரு. ஹரிஸ்சங்கர் கிருஷ்ணதுளசி, கா.சு.வேலாயுதன், சுரேஷ்குமார், மகேந்திரன், சித்திரை சிங்கர் சங்கரநாராயணன் பாலசுப்ரமணியன்.

பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவரது கருத்துக்களையும் இந்தத் தொடரிலேயே நான்கு எபிசோடுகள் ஒதுக்கி அவர்களின் பின்னுட்டத்தின் ஸ்கிரீன் ஷாட்டுடனயே வெளியிட்டிருந்தேன். அவர்களுக்கும் நன்றி.

தினந்தோறும் இந்தப் பதிவுக்காகவே காத்திருந்து படிக்கும் வாசகர்கள் கிடைத்திருப்பது நான் பெற்ற வரம். படிப்பதோடு மனதார Like பட்டனை கிளிக் செய்பவர்களை நட்பாகக் கொண்டிருப்பது பெருவரம். அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

லைக்கும் பின்னூட்டம் கொடுக்காமல் நாள் தவறாமல் படிக்கின்ற வாசகர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். பின்னூட்டம் கூட கொடுக்க வேண்டும் என்பதில்லை. பதிவைப் படித்தீர்கள் என்பதற்கு அடையாளமாக Like பட்டனை கிளிக் செய்தீர்கள் என்றால் எழுதும் எனக்கு இன்னும் ஊக்கமாக இருக்கும். சொல்லும் விஷயங்களில் அழகும் சுவாரஸ்யமும் கூடும்.

இந்தத் தொடரின் தொடர் வாசகியாக இருந்து மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் வகையில் சில அற்புத யோசனைகளை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியை உயர்திரு. பாரதி சங்கர் அவர்களுக்கும் நன்றி. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக ‘அறம் வளர்ப்போம்’ என்ற வாட்ஸ் அப் குழுவையும், யு-ட்யூப் சேனலையும் தொடங்கியுள்ளேன். இதன் நோக்கம்  பள்ளி மாணவர்களுக்கு அறத்தை சொல்லித்தருவதே. ஜனவரி 2020 முதல் தேதியில் இருந்து இந்த குழு இயங்கத் தொடங்கும்.

இதில் இடம்பெற்று வரும்  பதிவுகளை  அவ்வப்பொழுது  பலர்  என் அனுமதி கேட்டு என் பெயருடன்  தங்கள்  கல்வி நிறுவனங்களில், பத்திரிகையில்,  டிவியில், மேடை நிகழ்ச்சிகளில்  என அவரவர் களத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.  அவர்களுக்கும் நன்றி.

இந்தத் தொகுப்பு இ-புத்தகமாக தயாராகிக்கொண்டிருக்கிறது. சூழல் அமைந்தால் அச்சுப் புத்தகமாகவும் வெளியாகும்.

இந்தத் தொடரை இன்றுடன் முடித்துவிடுவேனோ என கவலை வேண்டாம்.

2020 – ஆம் ஆண்டு இந்தத் தொடரை ‘ஹலோ With காம்கேர்’ என்ற பெயரில் புதுப் பொலிவுடன் எழுத இருக்கிறேன்.

இந்தத் தொடரை தினமும் ஒரு கேள்விக்கு பதில் சொல்வதைப் போல கொண்டு செல்ல இருக்கிறேன். அவ்வப்பொழுது ஆடியோ, வீடியோ, அனிமேஷன் என பலவும் இடம்பெறும். வழக்கம்போல சுவாரஸ்யத்துக்கும் கருத்துச் செரிவுக்கும் பஞ்சமிருக்காது.

தொடங்க இருக்கும் ஆங்கிலப் புத்தாண்டில் உங்கள் அனைவரது கனவுகளும் நனவாகட்டும். வாழ்த்துகள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
December 31, 2019

(Visited 60 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon