ஃபேஸ்புக்கில் ஒரு சில பதிவுகளில் Like Comment என்ற இரண்டு விவரங்கள் மட்டும் இருக்கும். Share ஆப்ஷன் இருக்காது.
அதற்குக் காரணம்:
அந்த பதிவை எழுதியவர்கள் Privacy Setting – ல் Friends Only என்ற செட்டிங்கை பொருத்தியிருப்பார்கள். அப்படி பொருத்தி இருந்தால் Share ஆப்ஷன் வெளிப்படாது.
Privacy Setting – ல் Public என்ற செட்டிங்கை பொருத்தினால் மட்டுமே Share ஆப்ஷன் வெளிப்படும்.
பதிவை எழுதும்போதே News Feed என்ற ஆப்ஷனுக்கு அருகே உள்ள பட்டியலில் Public என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அப்படி செய்ய தவறிவிட்டால் எழுதி பதிவிட்ட பதிவில் உங்கள் பெயருக்கு கீழே உள்ள பட்டியலில் Public என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒருசிலர் ஷேர் ஆப்ஷன் வைக்க விரும்பாமல் Friends Only ஆப்ஷனை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
எழுத்தும் ஆக்கமும்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜனவரி 6, 2010