அறம் வளர்ப்போம் 34-40

அறம் வளர்ப்போம்-34
பிப்ரவரி 3, 2020

நிதானம் –  பொறுமையை கொடுக்கும், தைரியத்தை உண்டாக்கும், அறிவைத் தூண்டும்.

நாம் நிதானத்துடன் செயல்படும்போது பொறுமை நமக்குள் குடிகொள்ளும்.

நமக்குள் நாம் வளர்க்கும் நிதானமும் பொறுமையும் எந்த ஒரு செயலையும் தைரியத்துடன் செய்யும் மனப்பக்குவத்தைக் கொடுக்கும்.

நிதானம் அறிவாற்றலுடன் செயல்படும் பக்குவத்தைக் கொடுப்பதால் நம்மை நாமே காத்துக்கொள்ளும் வல்லமையை ஊட்டும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-35
பிப்ரவரி 4, 2020

இயற்கை –  வீட்டின் சுகாதாரம், நாட்டின் வளம், உலகின் சொத்து.

இயற்கை வீட்டின் சுகாதாரத்துக்கு வித்திடும். அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

நாட்டின் வளத்தைப் பெருக்கும் இயற்கையை அழிப்பதற்கு நம் யாருக்குமே உரிமை கிடையாது.

உலகின் சொத்தான இயற்கையை பாதுக்கப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-36
பிப்ரவரி 5, 2020

பகை –  நட்பை விரட்டும், துன்பத்தை சேர்க்கும், நிம்மதியை கெடுக்கும்.

பகை நமக்குள் புகுந்துகொண்டால் நம்முடைய நட்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு விலகும்.

பகை உணர்வினால் உண்டாகும் எதிர்மறை எண்ணங்கள் துன்பத்தை நம்மிடம் சேர்க்கும் சக்தி வாய்ந்தது.

நட்புகளும் விலகுதல், எதிர்மறை எண்ணங்கள், துன்பங்கள் சேருதல் என பகை நம் நிம்மதியை கெடுக்கும் பேராற்றல் பெற்றது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-37
பிப்ரவரி 6, 2020 

நட்பு –  பகையை விரட்டும், துன்பத்தை அழிக்கும், நிம்மதியை கொடுக்கும். 

நட்பு பகைமையை விரட்டும் சக்தி வாய்ந்தது.

பகைமை நம்மைவிட்டு விலகிவிடுவதால், நமக்குள் நேர்மறை எண்ணங்கள் தோன்றும். அது  துன்பங்களை அழிக்கும் ஆற்றல் பெற்றது.

பகைமை விலகுதல், நேர்மறை எண்ணங்கள், துன்பங்கள் சேராதிருத்தல் என நட்பு நமக்கு நிம்மதியையும் பேரானந்தத்தையும் கொடுக்கவல்லதாக இருக்கிறது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-38
பிப்ரவரி 7, 2020

நேர்மறை எண்ணங்கள் –  புத்துணர்வை கொடுக்கும், ஆற்றலை பெருக்கும், செயல்திறனை அதிகரிக்கும்.

நல்ல விஷயங்களை நல்லவிதமாக யோசிப்பதற்கு நேர்மறை எண்ணங்கள் என்று பெயர். இது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வைக் கொடுக்கும்.

நமக்குள் பொதிந்திருக்கும் ஆற்றலை அதிகரிக்கும். நல்ல செயல்களை செய்யத் தூண்டும்.

நல்ல விதமாக யோசிப்பதால் நல்ல விஷங்களை செய்யத் தூண்டுவதால் நம்முடைய செயல்திறன் அதிகரிக்கும். நிறைய நல்ல செயல்களை செய்வதற்கு நேர்மறை எண்ணங்கள் உதவும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-39
பிப்ரவரி 8, 2020

சோம்பல் –  வேலைகளை தாமதப்படுத்தும், சுறுசுறுப்பை விரட்டி அடிக்கும், பெருமைகளை குறைக்கும்.

சோம்பலாக இருக்கும்போது நாம் செய்ய நினைக்கும் வேலைகள் தாமதமாகும்.

தாமதமாக செய்யப்படும் பணிகளால் நமக்குள் சுறுசுறுப்பு விரட்டி அடிக்கப்படும்.

சுறுசுறுப்பு குறைந்து தாமதமாக செய்யப்படும் வேலைகளால் நம்முடைய பெருமைகள் குறையும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-40
பிப்ரவரி 9, 2020

எதிர்மறை எண்ணங்கள் –  புத்துணர்வை துரத்தும், ஆற்றலை குறைக்கும், செயல்திறனை வீழ்த்தும்.

தீய விஷயங்களை யோசிப்பதற்கு எதிர்மறை எண்ணங்கள் என்று பெயர். இது மனதுக்கும் உடலுக்கும் கேட்டை விளைவிக்கும். நம் புத்துணர்வை துரத்தி அடிக்கும்.

எதிர்மறை எண்ணங்கள் நல்ல விஷயங்களை செய்கின்ற ஆற்றலை குறைக்கும். தீய செயல்களையே செய்யத் தூண்டும்.

எதிர்மறை எண்ணங்களினால் நல்ல செயல்களை செய்கின்ற நம்முடைய ஆற்றல் குறைவதால் நம்முடைய செயல்திறன் குறையும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 138 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon