அறம் வளர்ப்போம் 48-54

அறம் வளர்ப்போம்-48
பிப்ரவரி 17, 2020

முயற்சி –  வெற்றியை கொடுக்கும், முழு மனதுடன் ஈடுபடுதல்,  செயற்கரிய செயல்களை செய்யத்தூண்டும்.

முயற்சி திருவினையாக்கும். வெற்றியைக் கொடுக்கும்.

ஈடுபாட்டுடன் முழு மனதுடன் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

நாம் எடுக்கின்ற பெருமுயற்சி செயற்கரிய செயல்களை செய்யத்தூண்டும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-49
பிப்ரவரி 18, 2020

சுத்தம் –  சுகாதாரத்தைக் கொடுக்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும், வியாதிகளை துரத்தும்.

சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. சுத்தம் சுகாதாரமான வாழ்வுக்கு வழிகாட்டும்.

சுத்தம் நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

சுத்தமாக இருக்கும்போது வியாதிகள் நம்மை அண்டுவதற்கு பயப்படும். தூர விலகிப்போகும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-50
பிப்ரவரி 19, 2020

வார்த்தைகள் –  வலிமையானவை, சூழலை நிர்ணயிப்பவை, இருபக்கமும் கூரான கத்தியின் தன்மை கொண்டவை.

வார்த்தைகள் மிகவும் வலிமையானவை.

நாம் பேசும் வார்த்தைகள் பிறரை ஆக்கப்பூர்வமான செயலுக்கும் வழிகாட்டும், அழிவுப் பாதைக்கும் திசை திருப்பும்.

வார்த்தைகள் இருபக்கமும் கூரான கத்தி போன்றது. நாம் பேசுகின்ற வார்த்தைகளின் தன்மைக்கு ஏற்ப பேசும் நம்மையும், நம் பேச்சை கேட்கும் பிறரையும் உயர்த்தும் அல்லது தாழ்த்தும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-51
பிப்ரவரி 20, 2020

தன்னம்பிக்கை –  தைரியத்தை ஊட்டும், வெற்றியை கொடுக்கும், வலிமையை உண்டாக்கும்.

தைரியத்தையும் ஊட்டி நேர்மறை சிந்தனைகளையும் ஊக்குவிக்கும்.

செய்யும் செயலுக்கு வெற்றியை கொடுக்கும்.

பேசுகின்ற வார்த்தைகளுக்கு வலிமையை உண்டாக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

 

அறம் வளர்ப்போம்-52
பிப்ரவரி 21, 2020

கற்பித்தல் –  கற்றுக்கொள்ளும் விஷயங்களுக்கு செலுத்தும் மரியாதை, பலமடங்கு அறிவாற்றலை பெறலாம், ஒருவகை உயரிய தானம்.

நீங்கள் கற்கும் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அதுவே நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்களுக்கு நீங்கள் செலுத்தும் ஆகச் சிறந்த மரியாதை.

கற்றுக்கொள்வதைவிட கற்பிக்கும்போது பல மடங்கு அறிவாற்றல் உங்களுக்குள் வளரும்.

பணமாகவும் பொருளாகவும் கொடுக்கும் தானத்தைப் போலவே கற்றுக்கொண்டதை பிறருக்கு கற்பிப்பதும் ஒருவகை தானமே.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-53
பிப்ரவரி 22, 2020

பிராத்தனை –  ஒருவகை தியானம், ஒருவகை நம்பிக்கை, ஒருவகை ஆக்கசக்தி

தினந்தோறும் காலையில் எழுந்ததும் சில நிமிடங்கள் பிராத்தனை செய்ய வேண்டும். அது அன்றைய நாள் முழுவதும் நாம் சிறப்பாக செயல்பட உதவும் ஒருவகை தியானம்.

எந்த பணியும் தொடங்கும்முன் பிராத்தனை செய்துவிட்டு தொடங்க வேண்டும். அது நாம் செய்கின்ற எல்லா வேலைகளையும் தடங்கலின்றி செய்ய உதவும் வலிமையான நம்பிக்கை.

பிராத்தனை என்பது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் ஊக்கசக்தி. இது நம் செயல்பாடுகளுக்கு பூரணமான ஆக்கசக்தியை அளிக்கவல்லது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-54
பிப்ரவரி 23, 2020

மொழி –  நல்லிணக்கத்தை வளர்க்கவல்லது, அறிவாற்றலை அள்ளி வழங்கவல்லது, புரிந்துணர்வை பெருக்கவல்லது

மொழி என்பது ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்வதற்கு உதவும் ஓர் அற்புத சாதனம்.

பல்வேறு மொழிகளை கற்கும்போது உலகம் முழுவதும் பரவியுள்ள பல்வேறு மக்களை அறிந்துகொள்ள முடியும். அவரவர்களின் மொழியில் வெளிவந்துள்ள புத்தகங்கள் திரைப்படங்கள் போன்றவற்றை புரிந்துகொள்வதன் மூலம் உலகளாவிய அறிவாற்றல் கிடைக்கும்.

மனிதர்களை மட்டுமில்லாமல் சக ஜீவன்கள் அனைத்தையும் நேசிக்கவும் புரிந்துகொள்ளவும் மொழி மிகப்பெரிய சாதனமாக உள்ளது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 77 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon