அறம் வளர்ப்போம்-76
மார்ச் 16, 2020
நம்பிக்கையும் அவநம்பிக்கையும் – நேர்மறையாக சிந்திப்பது நம்பிக்கை, எதிர்மறையாக கற்பனை செய்வது அவநம்பிக்கை, அவநம்பிக்கையை நம்பிக்கையாக மாற்றுவது தன்னம்பிக்கை
நம்பிக்கையும் அவநம்பிக்கையும் நம் அனைவருக்குள்ளேயும் இருக்கும். அது வெளிப்படுத்தும் விதத்தில்தான் வேறுபடுகிறோம்.
நேர்மைறையாக சிந்திப்பது நம்பிக்கை. எதிர்மறையாக கற்பனை செய்வது அவநம்பிக்கை.
நம்முடைய அவநம்பிக்கையைக்கூட நம்பிக்கையாக மாற்றுவதில்தான் நம் தன்னம்பிக்கை அடங்கியுள்ளது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-77
மார்ச் 17, 2020
வீடு – வெறும் கட்டிடம் அல்ல, உறவுகளால் பின்னிப் பிணைக்கப்பட்டது, அன்பினாலும் பாசத்தினாலும் கட்டுண்டது.
வீடு என்பது செங்கற்களாலும் சிமெண்ட்டினாலும் கட்டப்பட்டது மட்டும் அல்ல.
அப்பா அப்பா சகோதரன் சகோதரி கணவன் மனைவி குழந்தைகள் என உறவுகளால் பின்னிப் பிணைக்கப்பட்டதே வீடு.
அன்பினாலும் பாசத்தினாலும் கட்டுண்டதே வீடு.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-78
மார்ச் 18, 2020
வஞ்சப் புகழ்ச்சி – புகழ்வதைப் போல பாசாங்கு செய்தல், ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தும் யுக்தி, காரியம் சாதிக்க உபயோகப்படுத்தும் ஆயுதம்
வஞ்சம் என்றால் சூழ்ச்சி என்றும் சொல்லாம். பிறரை புகழ்வதைப்போல பாசாங்கு செய்து வஞ்சகமாகப் புகழ்வதை வஞ்சப் புகழ்ச்சி எனலாம். இது மறைமுகமாக இகழ்வதற்கு ஒப்பான செயலே.
பிறரை ஏமாற்றுவதற்கோ அல்லது பழி வாங்குவதற்கோ வஞ்சப் புகழ்ச்சியை ஒரு யுக்தியாக பயன்படுத்துவார்கள் ஒருசிலர்.
தாங்கள் விரும்பிய காரியத்தை சாதித்துக்கொள்ள பிறரை போலியாக புகழ்ந்து ஏமாற்றிப் பிழைப்பவர்களும் உள்ளனர்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-79
மார்ச் 19, 2020
விழிப்புணர்வு – தெளிவில்லாத விஷயத்துக்கான புரிதலை ஏற்படுத்துதல்,
வஞ்சம் என்றால் சூழ்ச்சி என்றும் சொல்லாம். பிறரை புகழ்வதைப்போல பாசாங்கு செய்து வஞ்சகமாகப் புகழ்வதை வஞ்சப் புகழ்ச்சி எனலாம். இது மறைமுகமாக இகழ்வதற்கு ஒப்பான செயலே.
பிறரை ஏமாற்றுவதற்கோ அல்லது பழி வாங்குவதற்கோ வஞ்சப் புகழ்ச்சியை ஒரு யுக்தியாக பயன்படுத்துவார்கள் ஒருசிலர்.
தாங்கள் விரும்பிய காரியத்தை சாதித்துக்கொள்ள பிறரை போலியாக புகழ்ந்து ஏமாற்றிப் பிழைப்பவர்களும் உள்ளனர்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-80
மார்ச் 20, 2020
பாராட்டும் புகழ்ச்சியும் – வாழ்த்துவதற்கான யுக்திகள், பாராட்டு சுயநலமற்றது; புகழ்ச்சி சுயநலம் சார்ந்தது, பாராட்டு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது; புகழ்ச்சி சந்தேகத்துக்கு உட்பட்டது.
இரண்டுமே வாழ்த்துவதற்கான யுக்திகள். பாராட்டு உள்ளத்தில் இருந்து நேர்மையாக வருவது, புகழ்ச்சி உதட்டில் இருந்து வெளிப்படுவது.
பாராட்டு ஆதாயம் எதையும் தேடாமல் பெருந்தன்மையை வெளிப்படுத்தும், புகழ்ச்சி ஆதாயத்தை எதிர்பார்த்து இயலாமையை வெளிப்படுத்தும்.
புகழ்ச்சிக்கு ‘வஞ்சப் புகழ்ச்சி’ என்ற எதிர்வார்த்தை உண்டு, பாராட்டுக்கு வஞ்சப் பாராட்டு என்ற எதிர்வார்த்தை கிடையாது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-81
மார்ச் 21, 2020
ஏளனம் – பிறரை அவமதித்தல், இழிவான செயல், நட்புணர்வை அழிக்கும்.
பிறர் மீது வெறுப்பை உமிழ்ந்து அவமதிப்பதற்கு ஏளனம் செய்தல் என்று பெயர்.
பிறரை புறக்கணிப்பதற்காக நாம் செய்யும் அவமரியாதை நம்மை நாம் தரம் தாழ்த்திக்கொள்ளும் இழிவான செயல்.
நமக்குள் இருக்கும் நட்புணர்வை அடியோடு அழித்து எதிர்மறை எண்ணங்களை நமக்குள் புகுத்தவல்லது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai
அறம் வளர்ப்போம்-82
மார்ச் 22, 2020
சுயக்கட்டுப்பாடு – நம்மை நாமே சீரமைத்தல், நம்மையும் பிறரையும் காக்கும், சுற்றமும் சூழலும் சுபிட்சமாகும்.
கட்டுப்பாடு என்பது பொதுவான விதிமுறை. சுயக்கட்டுப்பாடு என்பது நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் வரைமுறை.
சுய கட்டுப்பாடு என்பது நமக்கு மட்டுமில்லாமல் நம்மை சார்ந்தவர்களுக்கும் பயன் அளிக்கவல்லது. நம்மையும் காத்து பிறரையும் காக்கும் சக்தி வாய்ந்தது.
நம் சுற்றமும் சூழலும் அகத்தாலும் புறத்தாலும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க சுயக்கட்டுப்பாடு அவசியம் தேவை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai