மகிழ்ச்சியின் பாஸ்வேர்ட் – 2 : முனைவர் சரஸ்வதி ராமநாதன்

ஆளுமை – 2 :  முனைவர் சரஸ்வதி ராமநாதன்

அறிமுகம்:

நான் சரஸ்வதி ராமநாதன். ஓய்வு பெற்ற பேராசிரியை. பேச்சாளர். எழுத்தாளர். சமூக சிந்தனையாளர். பல்வேறு இலக்கிய அமைப்புகளின் தலைவி.

எங்கள் பெற்றோர் படித்தது குறைவு. அம்மா ஐந்தாம் வகுப்பு. அப்பா ஏழாம் வகுப்பு. பண்பாடு பக்தி கொடையுள்ளம் நேர்மையை கற்றுத் தந்தார்கள். இசை நடனம் சமஸ்கிருதம் ஹிந்தி எல்லாம் கற்க வைத்தார்கள்.

1955 புயலில் குடும்பப் பொருளாதாரம் சரிந்ததால் நான் வேலைக்குப் போய் தம்பி தங்கைகளைப் படிக்க வைத்தேன். எஸ்.எஸ்.எல்.ஸி படித்த நான் இசையாசிரியை ஆகி முயற்சியால் படித்து முன்னேறி எம்.ஏ.பி, பி.ஹெச்.டி. ஆகி 40 வருடம் நாலு மாதம் கல்விப் பணி செய்தேன். உலகம் முழுதும் பயணித்தேன். தமிழர் அறிந்த பெயர் என் பெயர். இறையருளே துணை. கணவர் பிள்ளைகள் நல்லவர்கள். மாமா என் கணவர். நண்பர் வழிகாட்டி எல்லாம் அவரே.

உறுதி ஊக்கம் விடா முயற்சி தாரக மந்திரங்கள். வயிற்றில் பிள்ளை. கையில் பிள்ளையுடன் தேர்வுகள் எழுதி முதலிடத்தைப் பெற்றேன். இரக்கம் கொடையுள்ளம் அதிகம்.

மைனஸ்:

சற்றுக் கோபம் அதிகம். எதற்கெடுத்தாலும் கவலைப்படுவேன். மைக்கைத் தூக்கி எறிந்ததுண்டு. நானிருக்கும் சுறுசறுப்புடன் எல்லாரும் வேலை செய்யணுமென்ற எதிர்பார்ப்பு மன உளைச்சல் தரும். மனவளக்கலைப் பயிற்சி கோபத்தைக் குறைத்தது. ‌கோபம் கொன்றுவிடும். கவலைத் தின்று விடும்.

‘என்னை கவலைகள் தின்ன தகாதென
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்…’ என்றார்பாரதி.

நல்ல பக்தி. இலக்கியப் பயிற்சி மனதை வளப்படுத்தும். ஆசை குறைந்தால் தானதர்மம் செய்வோம். ‘கொடு கொடு. அவன்கொடுப்பான்’ (Spend Spend Spend, he will send send send) என என் குரு சிவானந்த சுவாமி சொன்னார். தனக்கு மிஞ்சி தானம் என்பது தவறு. ஆசையைக் குறைத்துக் கொண்டு பிறருக்குத் தர வேண்டும்.

ப்ளஸ்:

உறுதி ஊக்கம் விடாமுயற்சி தாரக மந்திரங்கள்.

இறைவனுக்கு நன்றி

காஞ்சிப் பெரியவர் பெயர் தந்த பேறு எனக்கு ஒரு குறையுமில்லை. நல்லகணவர். என்னை வாழ்வில் உயர்த்தினார். நல்ல மனமிருந்தால், நல்லபண்பிருந்தால், நல்ல குடும்பம் அமைந்தால் என்றும் மகிழ்ச்சியே. வாழ்கவளமுடன்.

தொகுப்பு
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO, Compcare Software

 

(Visited 309 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon