ஹலோ with காம்கேர் – 245
September 1, 2020
கேள்வி: எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம்?
இந்த கட்டுரையில் கொடுத்துள்ள ஜெயா டிவி நேர்காணல் வீடியோ 38 நிமிடங்கள். 2000-த்தில் வெளியானது. நான் காம்கேர் நிறுவனம் தொடங்கிய ஆண்டு 1992.
1992-2000 வரையிலான என் எட்டு வருட அனுபவத்தில், 20 வருடங்களுக்கு முன்னர்(ரே) கம்ப்யூட்டர் விலை குறையும்போதும், தாய் மொழியில் தொழில்நுட்பம் முழுமையாக சென்றடையும்போதும்தான் தொழில்நுட்ப வளர்ச்சி முழுமையடையும் என்று தொலைநோக்குப் பார்வையில் சொல்லி இருக்கிறேன்.
அது இன்று நனவாகி உள்ளது.
சர்வீஸுக்குக் கட்டணம் 100 ரூபாய், இன்ஜினியர்களுக்கு சம்பளம் 10,000 ரூபாய்!
கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்வதற்கு 100 ரூபாய்தான், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சம்பளம் மாதம் 10,000 ரூபாய் கிடைப்பதே அதிசயம்.
எங்கே, எப்போது?
நம் நாட்டில்தான். 2000-ம் வருட தொடக்கத்தில்.
1990-களில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் மெல்ல அடி எடுத்து வைக்க ஆரம்பித்தது. 1995-96 களில் இன்டர்நெட் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. 2000-ல் கொஞ்சம் நடைபயிலத் தொடங்கியிருந்தது.
அந்த கலாகட்டத்தில் நம் மக்களை தொழில்நுட்பம் பக்கம் கொண்டுவர அத்தனை பெருமுயற்சிகள் தேவையாக இருந்தது.
2020-ல் நான் சொல்லவே வேண்டாம். தொழில்நுட்பம் நம்மை இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அதுவும் ஜெட் வேகத்தில்.
2000-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜெயாடிவியில் என் நேர்காணல்!
கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களே 1992-ல் மிகக் குறைவு. எனவே, என்ன டிகிரி படித்திருந்தாலும் வேலைக்கு எடுத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து படிப்படியாக சொல்லிக் கொடுத்து வேலைக்கு அமர்த்தினோம். எங்கள் நிறுவன சாஃப்ட்வேர், அனிமேஷன் பிரிவுகளுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு எப்படி பயிற்சி அளித்து வேலைக்கு தயார் செய்தோம் என்பதை எல்லாம் விரிவாக சொல்லி இருக்கிறேன்.
மேலும், நான் சாஃப்ட்வேர் அனிமேஷன் தயாரிக்க எப்படியான சூழலை உருவாக்குகிறேன், புத்தகம் எழுத எப்படி ப்ளான் செய்கிறேன், எனக்கு யார் ரோல்மாடல் போன்ற பல சுவாரஸ்யமான கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறேன்.
எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் என்று தெரிந்து கொள்ள இந்த லிங்கில் என் நேர்காணலை பாருங்களேன். Jaya TV Interview APR 2000
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software