ஏன் யானை பாராசூட்டில் பறக்கும் படம்?
ஆகஸ்ட் 31, 2020 ‘ஹலோ வித் காம்கேர்’ பதிவில் நான் எழுதி இருந்த ‘பிசினஸில் மனிதாபிமானம் பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா?’ என்ற பதிவுக்கு பாராசூட்டில் யானை பறக்க முயல்வதைப் போல போட்டிருந்தேன். பதிவுக்கும் அந்த படத்துக்கும் என்ன சம்மந்தம் என்று ஒருசிலர் கேட்டிருந்தார்கள்.
பிசினஸில் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கத்தான் செய்யும். மனிதாபிமானம் பார்த்துக்கொண்டு கடன் கொடுத்தவர்களுக்கெல்லாம் விலக்கு அளிக்க முயல்வது யானை பாராசூட்டில் பறக்க ஆசைப்படும் கதைதான்.
ஆனால் முயற்சி செய்தால் பிசினஸில் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள முடியும் என்பதற்காகவே சிம்பாளிக்காக அந்தப் படத்தைப் போட்டிருந்தேன்.
மேலும் வசந்த் & கோ திரு. வசந்த குமார் அவர்களின் புகைப்படத்தை ஏன் பகிரவில்லை என்பது சிலரது கேள்வி.
அவர் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தால் அது அவர் குறித்த விமர்சனத்துக்கு மட்டுமே வித்திடும்.
அவரது உழைப்பின் சாகசமும், திறமையின் வலிமையும் வாசகர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதால்தான் புகைப்படத்தை வெளியிடவில்லை. புகைப்படம் போட்டிருந்தால், முன்பே தீர்மானம் செய்யப்பட்ட தகவல்களுடன் பதிவை படிக்கத் தொடங்குவார்கள். வாசகர்கள் எந்த முன் தீர்மானமும் இல்லாமல் பதிவைப் படிக்கும்போதுதான் சாராம்சம் முழுமையாக சென்றடையும் என்பதால்தான் அவர் புகைப்படத்தைப் பயன்படுத்தவில்லை.
அதனால்தான் பதிவில் கூட அவரது பேட்டி என்பதை கடைசியில்தான் சொல்லி இருப்பேன். தொடக்கத்தில் பதிவை படிக்கும்போது அது என் அனுபவம் போன்றே படிப்பவர்களுக்கு சென்று சேர்ந்திருக்கும். இறுதிவரை படித்தவர்களுக்கு மட்டுமே அது வசந்த் & கோ திரு. வசந்த குமார் அவர்களின் பேட்டி என்பது புரிந்திருக்கும்.
இந்தப் பதிவைப் படிக்காதவர்களுக்காக லிங்க்… http://compcarebhuvaneswari.com/?p=6881
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஆகஸ்ட் 31, 2020