ஜம்முனு வாழ காம்கேரின் OTP-60: ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ – Virtual Event!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 60
மார்ச் 1, 2021

‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ – வெர்ச்சுவல் நிகழ்ச்சி (Daily a Book – Virtual Event)

காம்கேர் டிவியும், சமூக வலைதளங்களுமே நிகழ்ச்சியின் மேடை. இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை என் வாசகர்கள் அனைவருமே முக்கியஸ்தர்கள்தான். சிறப்பு விருந்தினர்கள்தான்.

அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கவும், அறிமுகப்படுத்தவும் சில சிறப்பு விருந்தினர்களை அழைத்திருக்கிறேன். அவர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் எங்கள் காம்கேர் நிறுவனத்துக்கும், இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டுக்கொண்டிருக்கும் புத்தகங்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.

இந்த நிகழ்ச்சி எதற்காக?

இந்த வருடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் காட்சியை முன்னிட்டு தினம் ஒரு புத்தக வெளியீடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளேன். இதன் நோக்கம் 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவதாக ஏற்பாடு. 14 நாட்கள் 14 நூல்கள்.

இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை 14 நாட்களும் நடத்துவதாக ஏற்பாடு. சிறப்பு விருந்தினர்கள் அவர்வர்கள் செளகர்யத்துக்கு ஏற்ப ஏதேனும் ஒரு நேரத்தில் வருகை தந்து தங்கள் கருத்துக்களை எழுத்து வடிவிலோ அல்லது வீடியோவாகவோ அல்லது இரண்டு விதத்திலுமோ பதிவு செய்வார்கள். அவற்றை என் ஃபேஸ்புக் பக்கத்தில் உடனுக்குடன் பகிர்கிறேன். தவற விடாமல் பார்த்து தங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

நிகழ்ச்சியின் கடைசி நாளான மார்ச்-9 ம் தேதி காம்கேர் டிவி – யுடியூப் சேனலில் ஒட்டு மொத்தமாக வெளியிடுகிறேன்.

நேற்று வரை ஐந்து நாட்கள் கடந்துள்ள புத்தகக் காட்சியில் இதுவரை வாழ்க்கையின் அப்பிடைசர், வாழ்க்கையின் OTP, வாழ்க்கையின் அப்லோடும், டவுன்லோடும்!, குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட்,எந்தப் பாதையில் உங்கள் பயணம்? என 5 இ-புத்தகங்களை அமேசானில் வெளியிட்டுள்ளேன்.

இதுபோல இனிவரும் 9 நாட்களில் இன்னும் 9 நூல்கள் வெளிவரும்.

எதிர்கால சந்ததியினருக்குப் பயன்படும் வகையில் இவர் வெளியிடும் வாழ்வியல் நெறிகளையும் தன்னம்பிக்கையையும் ஊட்டும் இந்த நூல்களை வாங்கி படித்து உங்கள் அடுத்தத் தலைமுறையினருக்கு பொக்கிஷமாக்கிக் கொள்ளுங்கள்.

எப்படி வாசிப்பது, எப்படி சேகரிப்பது?

உங்கள் கையில் உள்ள மொபைலில் கிண்டில் ஆப்பை டவுன்லோட் செய்துகொண்டு இந்த இ-புத்தகங்களை வாசிக்கலாம். இடத்தை அடைத்துக்கொள்ளாமல் எத்தனை இ-புத்தகங்களை வேண்டுமானாலும் வாங்கி சேகரிக்க முடியும். ஆஃப் லைனில் படிக்க முடியும். இணையத் தொடர்பு தேவையில்லை. உங்கள் போனை நீங்கள் மாற்றினாலும் மீண்டும் கிண்டில் ஆப்பை டவுன்லோடு செய்துகொண்டால் உங்கள் லைப்ரரியில் நீங்கள் வாங்கிய இ-புத்தகங்கள் பத்திரமாக இருக்கும்.

இந்தத் திட்டத்தில் கீழ் இதுவரை வெளியான புத்தகங்கள்:

  1. வாழ்க்கையின் அப்பிடைசர்

ஜம்முனு வாழ வழிகாட்டும் நூல்! விலை ரூ.49/-

https://www.amazon.in/dp/B08TV2JJB4

  1. வாழ்க்கையின் OTP

தவமாய் வாழ்ந்து வரமாய் குவிக்க வழிகாட்டும் நூல்! விலை ரூ.49/-

https://www.amazon.in/dp/B08VWGKKV6

  1. வாழ்க்கையின் அப்லோடும், டவுன்லோடும்

சுமக்க வேண்டியதை சுமக்கவும், ஒதுக்க வேண்டியதை ஒதுக்கவும் கற்றுக்கொடுக்கும் நூல்! விலை ரூ.75/-

https://www.amazon.in/dp/B08XGLB6X6

  1. குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட்!

குழந்தைகள் விரும்பும் பெற்றோராகத் திகழ கற்றுக்கொடுக்கும் நூல்! விலை ரூ.75/-

https://www.amazon.in/dp/B08XN9GGMT

  1. எந்தப் பாதையில் உங்கள் பயணம்?

குழந்தைகள் விரும்பும் பெற்றோராகத் திகழ கற்றுக்கொடுக்கும் நூல்! விலை ரூ.75/-

https://www.amazon.in/dp/B08XPMXB91

வாசகர்களாகிய உங்கள் அனைவரின் பேரன்புடன் என் தொழில்நுட்பப் பயணத்தில் எழுத்துப் பயணத்தையும் இணைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

என் எழுத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்பு நன்றிகள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

#காம்கேர்_புத்தகம் #compcare_book

#Daily_a_Book_Release_Virtual_Event

(Visited 8 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari