தினம் ஒரு புத்தக வெளியீடு[8]: கொண்டாட்ட நாள்-8

தினம் ஒரு புத்தக வெளியீடு – வெர்ச்சுவல் நிகழ்ச்சி –  கொண்டாட்டம் –  நாள் 8!

நாள்: மார்ச் 9,  2021

இடம்: இந்த நிகழ்ச்சியை 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவதாக ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியை 14 நாட்களும் வெர்ச்சுவலாக ஆன்லைனில் நடத்துகிறேன். ஃபேஸ்புக்கும், காம்கேர் டிவியுமே நிகழ்ச்சி மேடை. அந்த வகையில் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று  நட்புகள், நலன் விரும்பிகள், வாசகர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள்: நட்புகள், நலன் விரும்பிகள், வாசகர்கள்

உயர்திரு. சவுந்தர்ராஜன் ரகோத்தமன்:

மருந்துக்குக் கூட தங்கள் எழுத்தில் எதிர் மறை எண்ணங்கள் இருந்ததில்லை.எப்போதும் பாஸிட்டிவ் ஆகவே இருக்கும். ‘இது தப்பு, இது சரி’ என்று நாசூக்காக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று  ‘பொளேரென’ உணர்த்திவிடுவீர்கள். எந்த இடத்திலும் சுயத்தை இழக்காமல், உயரிய பண்புகளை சுட்டி காட்டி, இப்படி இருப்பது நல்ல பண்பு என்று தினமும் உணர்த்தி வருவதைத் தவறவிடாமல் படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டாலே போதும். தன்னம்பிக்கையும், உற்சாகமும் தானாக வந்து விடும். The day starts with your tonic words.

உயர்திரு. சங்கர நாராயணன் பாலசுப்ரமணியன் (சித்திரை சிங்கர்):  

தொடர்ந்து 14 நாட்கள் தினம் ஒரு நூல் வெளியீடு என்பது ஒரு வியப்பான செயலாக தோன்றினாலும் அதன் பின்னணியில் உங்களின் கடின உழைப்பு எனது மனதில் பதிக்கிறது. உங்கள் உழைப்பு போற்றத்தக்கது. பாராட்டுக்கள். என்றும் தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

உயர்திரு. சாந்தா தேவி:

தினம் ஒரு புத்தக வெளியீடு. வெர்ச்சுவல் நிகழ்ச்சி மூலம் வெளியீடு  மிகவும் சிறப்பாக சாதனையாக நடைப்பெற்று வருகிறது. தங்கள் முயற்சிகள், எளிதாக எளியவர்களுக்கு கணிணி அறிவை மேம்படுத்த உதவும் மிகப்பெரிய வரம்.  உங்கள் பதிவுகள் எப்போதும் நல்ல பாஸிட்டிவ் வைப்ரேஷன் தரக்கூடியவை. சோர்வு நேர்கையில் உங்கள் பதிவுகளைத்தான் படிக்கிறேன். நண்பர்களுக்கும் லிங்க் அனுப்புவேன். வாழ்த்துகள் மேடம்.

உயர்திரு. ராம்குமார்:  

வாழ்வில் சில நேரங்களில் சிலரை இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வது பெருமை என்பர். காம்கேர் மேடம் எழுதுவதை படிக்கிறோம், உற்சாக மனதோடு வலம் வருகிறோம். அதே சமயம் நமக்கு தோன்றும் புதிய எண்ணங்களை  சொன்னாலும் கேட்டுக்கொண்டு, ஏற்றுக் கொண்டு அதனை பதிவுகளில் எழுதி கருத்துச் சொன்ன அன்பரின் பெயரோடு வெளியிட்டு கௌரவிப்பார். ஆம். காம்கேர் புவனேஸ்வரி மேடம் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதில் பெருமையடைவோம்!

உயர்திரு. ஈஸ்வரமூர்த்தி நடராஜன்:

தினம் ஒரு புத்தகம் வெளியிடு அருமையான நிகழ்ச்சி. இதயங்கனிந்த வாழ்த்துகள்.

உயர்திரு. செளந்தர மகாதேவன்:

வியக்க வைப்பவர். இவரது நூல் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.

உயர்திரு. உதயபாபு:

விஐபியாக, இயக்குனராக, தொழிலதிபராக, எழுத்தாளராக, மென்பொருள்         நிறுவன சிஇஒவாக, பெற்றோர் போற்றும் மகளாக, எத்தனை எத்தனை அவதாரங்கள். எத்தனை சூழல் வந்தாலும் தளாராமல் அதிலிருந்து வெளியே வரும் கலையை கற்றுத்தந்த இரும்பு மனிஷிக்கு ஹாட்ஸப்.

உங்களது வழிகாட்டலில் பண்பட்டவர்கள் வெள்ளத்தில் சிறு துளியாய் நான். எத்தனை சோதனை வந்த போதும் நேர்மறை எண்ணங்களை தூண்டி நம்பிக்கை வளர்த்த எண்ணற்ற பதிவுகள், உங்க ‘அறிவரையில்’ உதித்த வார்த்தை ‘வைரங்கள்’ என்றும் ஒளியாய்.

தங்கள் தினம் ஒரு புத்தக வெளியீடு வெர்ச்சுவல் நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள் மேம்.

உயர்திரு. குமரன் கந்தசாமி:

தங்கள் தினம் ஒரு புத்தக வெளியீடு சிறக்க வாழ்த்துகள் மேடம்.

உயர்திரு. கணேஷ்பாபு:

பலரும் கற்ற கல்வியை காசுக்காக மட்டுமே பயன்படுத்துவதுடன் விட்டு விடுவதால் மற்றவர்களது நிலையை பட்டங்களை மட்டுமே மேலோட்டமாக பார்த்து முடிவு செய்கின்றார்கள். உங்களைப் பொருத்தவரை மேலும் மேலும் உங்கள் துறை சார்ந்த விசயங்களை கற்றுக்கொண்டே அதை வெற்றிகரமாக பயன்படுத்துவதுடன் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் விதைத்துக்கொன்டே பயணிக்கின்றீர்கள்.

உயர்திரு. சின்னசாமி சந்திரசேகரன்:  

உங்களின் பதிவைப் படிக்கும்போது சத்குரு அவர்களின் உரையைக் கேட்பது போலவே இருந்தது.

உயர்திரு. ராமன் கோவிந்தன்:

வாழ்வியலில் தங்களின் கருத்துக்கள் அற்புதமானவை .Highly appreciable. Positive approach. தங்களின் கருத்துக்கள் ஒளி விளக்கு. தினம் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்

உயர்திரு. சிவபிரகாசம்:

உங்களின் 24×7×365 விழிப்புணர்வுத் தன்மை அசர வைக்கிறது! *Even little things teach us a lot but the chances are left with us to learn from them* என்பதை உங்கள் பதிவுகளில் நித்தம் எவ்வளவு அழகாக  விளக்கி வருகிறீர்கள்? தினம் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்.

வாசகர்களாகிய உங்கள் அனைவரின் பேரன்புடன் என் தொழில்நுட்பப் பயணத்தில் எழுத்துப் பயணத்தையும் இணைத்துக்கொண்டு தொடர்கிறேன்.

என் எழுத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்பு நன்றிகள்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP
#காம்கேர்_புத்தகம் #compcare_book
#Daily_a_Book_Release_Virtual_Event

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon