ஜம்முனு வாழ காம்கேரின் OTP-91: விரல் நுனியில் உன் உலகம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 91
ஏப்ரல் 1, 2021

விரல் நுனியில் உன் உலகம்!

கல்கி குழுமத்தில் காம்கேரின் பயணம் அல்லது காம்கேரின் பயணத்தில் கல்கி குழுமம். இந்த இரண்டில் எதுவாக இருந்தாலும் அது பொருத்தமாகவே இருக்கும். இறைவனில் அருளாலும் பெற்றோரின் ஆசியாலும் அழகான இந்த ஏப்ரல் மாதத்தில் அதற்கான பிள்ளையார் சுழி!

1996 –ல் ஒரு நாள்!

இப்போதுதான் நடந்ததைப்போல் உள்ளது.

‘தொழில்நுட்பக் கட்டுரைகளை தமிழில் கொண்டுவரலாம்’ என்று மங்கையர்மலருக்கு போஸ்ட்கார்டில் தகவல் அனுப்பினேன். அடுத்த ஓரிரு நாட்களில் அவர்களிடம் இருந்து ‘நேரில் வரச்சொல்லி’ பதில் தபால்.

அப்படி உருவானதே ஒரு வருடம் வெற்றிகரமாக பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ‘உலகம் உன் கையில்’ என்ற கட்டுரைத்தொடர். ஜனரஞ்சகமான பெண்கள் மாத இதழில் நான் அறிந்த வகையில் முதன்முதலில் வெளியான தொழில்நுட்பக் கட்டுரைத்தொடர் அதுவே.

2021 –ல் ஒரு நாள்.

கல்கிக் குழுமப் பத்திரிகைகள் ஆன்லைனுக்கு மாறிக்கொண்டிருக்கின்ற இந்த வேலையில் ‘விரல் நுனியில் உன் உலகம்’ என்ற கட்டுரைத்தொடரை ஆரம்பித்துள்ளேன்.

கல்கி குழுமத்தின் தலைமையில் இருந்து அலைபேசி அழைப்பு. அவர்களின் தொழில்நுட்பப் பயணத்துடன் இணைந்து பயணிக்க முடியுமா? என கேட்டார்கள்.

அந்தப் பயணத்திற்கு ஆரம்பப் புள்ளியே இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரை மட்டுமே பயணம் அல்ல.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ‘உலகம் உன் கையில்’, ‘விரல் நுனியில் உன் உலகம்’ இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கூகுள் வேகத்தில் உயர்ந்துள்ளது.

உலகம் உள்ளங்கையில் இருந்து விரல் நுனிக்கு வந்துள்ள இந்த காலகட்டத்தில் மங்கையர் மலர் பத்திரிகையும் தன் வாசகிகளை பில்கேட்ஸாக்கும் பொருட்டு ‘ஸ்மார்ட் லேடி’ என்ற தொழில்நுட்பத் தொடர், பிளாக், ஃபேஸ்புக்கில் வாசகிகளுடன் நேரடியாக உரையாடி தொழில்நுட்ப ஆலோசனைகள் கொடுத்தல், யு-டியூப் சேனல்களில் வாசகிகளின் வீடியோக்களை பதிவிடுதல் என அசுர வேகத்தில் வளர்ந்து இன்று பத்திரிகையையே ஆன்லைனில் கொண்டுவந்து அசத்தியுள்ளது.

இந்த சேவையில் இனி எங்கள் காம்கேரும் இணைந்துகொண்டுள்ளது. மாற்றங்கள் இனி முன்னேற்றமாகவே இருக்கும்.

முன்னேற்றங்கள் வெப்சைட்டில் மாற்றங்களுடன், மொபைலில் ஆப் வடிவத்துடன் வெளிவர காத்திருக்கின்றன. தொடர்ச்சியாக ஆன்லைனில் கல்கிகுழுமத்துடன் இணைந்திருங்கள். கல்கி குழுமத்தின் ஃபேஸ்புக் பேஜ், டிவிட்டர் பக்கங்கள், யு-டியூப் சேனல், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியா பக்கங்களும் புத்தம் புது வடிவில் தயார் ஆகிக்கொண்டிருக்கின்றன.

Stay Tuned with KALKI GROUP!

இந்த மாதம் நான் எழுதியுள்ள கட்டுரையை வாசிக்க: https://www.kalkionline.com/flipb/upload/mmalar/2021/apr/01042021/#page/31

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 3 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari