தினமலர் – ‘சொல்கிறார்கள்’: தொலைந்த மொபைலை கண்டுபிடிக்கலாம் (June 12, 2021)

ஜூன் 1-15, 2021 மங்கையர் மலரில் வெளியான ‘விரல் நுனியில் உன் உலகம்’
கட்டுரைத் தொடரில் இருந்து சிறு பகுதியை
ஜூன் 12, 2021 தினமலர் ‘சொல்கிறார்கள்’ பகுதியில்  வெளியிட்டுள்ளார்கள்.
https://m.dinamalar.com/spl_detail.php?id=2783127

அனைவரும் மொபைல் போன் வைத்துள்ளோம். எல்லா இடங்களுக்கும் அவற்றை எடுத்துச் செல்கிறோம். அது தொலைந்து விட்டால் எப்படி கண்டு பிடிப்பது; அதில் உள்ள விபரங்களை அழிப்பது எப்படி என விளக்குகிறார், ‘காம்கேர்’ கே.புவனேஸ்வரி: நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக, ‘ஸ்மார்ட் போனும், ஆப்’களும் மாறிவிட்ட நிலையில், அதன் பாதுகாப்பும் மிக அவசியமாகிறது.எனவே, ஸ்மார்ட் போனை பத்திரப்படுத்தி வைப்பதுடன், ஒருவேளை தொலைந்துவிட்டால் என்ன செய்யலாம் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பாக இருப்பதற்கு முயல வேண்டும். அப்படியும் பிரச்னைகள் ஏற்பட்டால், அதில் இருந்து வெளியில் வருவதற்கும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.நாம் ஆசை ஆசையா வாங்கிய ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டதா… கவலை வேண்டாம்; கண்டுபிடித்து விடலாம்.முதலில் போனை வாங்கியவுடன், போனின், ஐ.எம்.இ.ஐ., எண்ணை தெரிந்து கொள்ளணும். போனில், ‘*#06#’ என்று டைப் செய்து டயல் செய்தால், போனின் ஐ.எம்.இ.ஐ., எண் வெளிப்படும்; அதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து, அந்த ஸ்மார்ட் போனில் நமக்கான, ‘இ – மெயில்’ முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் அக்கவுன்ட் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.போன் தொலைந்து போனால், அந்த அக்கவுன்ட் மூலம் நம் போன் எங்குள்ளது என, தெரிந்து கொள்ள முடியும். அதோடு, அதை, ‘லாக்’ செய்யவும் முடியும்; அதிலுள்ள தகவல்களை அழிக்கவும் முடியும்.எனவே, போனின் மாடல் எண், ஐ.எம். இ.ஐ., எண், போன் அக்கவுன்டுக்கான இ – மெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் போன்ற வற்றை மறந்து விடாமல் இருக்க, பத்திரமாக எங்கேனும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.நம் போன் காணாமல் போனால், android.com/devicemanager ‘ அல்லது ‘ https://findmymobile.samsung.com/’ என்ற ‘வெப்சைட் லிங்க்கு’கள் மூலம் கண்டுபிடித்து விட முடியும்.இந்த இணைய தளத்திற்கு சென்று, நம், ‘ஜி – மெயில்’ முகவரி மற்றும் ‘பாஸ்வேர்டு’ மூலம் ‘லாகின்’ செய்து கொள்ள வேண்டும். இப்போது கிடைக்கும் திரையில், ‘ரிங், லாக், எரேஸ்’ என, மூன்று விபரங்கள் இருக்கும்.’ரிங்’ என்ற விபரத்தைகிளிக் செய்தால், ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி செய்து எங்கிருக்கிறது என, கண்டறியலாம்.’லாக்’ ன்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் மொபைல் லாக் ஆகும்படி செய்து விடலாம். ‘எரேஸ்’ என்ற விவரத்தை கிளிக் செய்தால், நம் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி செய்து கொள்ளலாம்.முக்கியமாக, நம் போன் தொலைந்து விட்டால், போன் தொலைந்த அடுத்த நிமிடம் கம்ப்யூட்டர் மூலம் நம் இ – மெயில், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிட வேண்டும்.

– தினமலர் ஜுன் 12, 2021

(Visited 20 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon