பதிவு எண்: 951 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 220
ஆகஸ்ட் 8, 2021 | காலை: 6 மணி
‘50 நாட்களில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமா?’
‘50 நாட்களில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டுமா?’ என்ற அறிவிப்பை கொடுத்து அதற்கான பதிலை சொல்வதாகச் சொல்லி இருந்தேன்.
நேர்மறை விஷயங்கள் நமக்குள் ஏற்படும் மாற்றங்கள் நம்மை என்னவெல்லாம் செய்யும் என்பது குறித்து என் அனுபவங்கள் வாயிலாக கடந்த 950 நாட்களாக, அதாவது 2019 ஆண்டு ஜனவரி 1-ல் இருந்து காலை 6 மணிக்கு நாள் தவறாமல் பதிவிட்டு வருகிறேன். 1000-மாவது பதிவை நெருங்க இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில் என் பதிவுகள் குறித்த தங்கள் அனைவரின் மேலான கருத்துக்களைத் தொகுக்கும் முயற்சியில் இருக்கிறேன்.
ஒருவரின் படைப்பு பார்வையாளர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் ஒருவருக்கு ஏற்பட்ட தாக்கத்தை மற்றவர்கள் அறியும்போது அவர்களுக்குள்ளும் அந்தப் படைப்பின் தாக்கம் உண்டாகலாம்.
ஒரு படைப்பு எப்படி மாற்றத்தை கொண்டு வருகிறதோ, அதே அளவு அந்தப் படைப்பினால் உண்டான அனுபவத்தைப் பகிரும்போது மற்றவர்களுக்குள் அதுபோன்றதொரு தாக்கம் வேறொரு வடிவில் வரலாம். அந்த தாக்கம் நல்லதாக அமையப்பெற்றால் அனைவருக்கும் நலன்தானே.
என் பதிவுகளை தவறாமல் படித்து வந்த உங்களுக்குள்ளும் ஏதேனும் மாற்றம் உண்டாகி இருக்கும். அந்த மாற்றம் பெரிய அளவில் இல்லை என்றாலும், சின்ன அசைவையாவது உண்டாக்கி இருக்கும். அதுகுறித்து என் பதிவுகளை வாசிக்கும் அன்பர்களில் பலர் அவ்வப்பொழுது என் பதிவின் பின்னூட்டங்களிலேயே தங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறீர்கள்.
அவற்றை எல்லாம் தொகுத்து தினம் ஒருசிலரின் அனுபவங்களைப் பகிரலாம் என்று நினைத்து, இன்றில் இருந்து பதிவிட ஆரம்பிக்க இருக்கிறேன்.
இன்னும் 50 நாட்களுக்கு தொடர்ச்சியாக என் பதிவை வாசிக்கும் அன்பர்களின் அனுபவங்களை பகிர உள்ளேன்.
வழக்கமான என் பதிவுகளும் உண்டு. உங்கள் அனுபவங்களின் தொகுப்பும் உண்டு. சுருங்கச் சொன்னால் இரட்டைப் பதிவுகளாக கொடுக்க நினைத்திருக்கிறேன். இதோ இன்றைய அனுபவப் பகிர்வைப் படியுங்களேன். https://www.facebook.com/media/set/?set=a.5857737410967462&type=3
(தவறாமல் வாசித்து லைக் செய்து அங்கீகரியுங்கள். அப்போதுதான் உங்கள் அனுபவங்களைப் பகிரும்போது அவர்களும் அங்கீகரிப்பார்கள்)
உங்கள் கருத்துக்களும் இதுபோல வர வேண்டும் என நினைத்தால் இன்றில் இருந்து என் எழுத்துகள் உங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை பின்னூட்டமாக பதிவிடத் தொடங்குங்கள். அவற்றை நான் தொகுத்து தினந்தோறும் ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.
என் எழுத்து அது சார்ந்த அனிமேஷன், ஆவணப்படங்கள், யு-டியூப் நிகழ்ச்சிகள் என அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்கியது என்ற கோணத்தில் சொல்ல முடிந்தால் சிறப்பு.
பின்னாளில் அவை என் பதிவுகள் புத்தகமாகும்போது ‘வாசகர்கள் கருத்துக்கள்’ என்ற தலைப்பில் இடம்பெறும்.
இன்றிலிருந்து 50 நாட்களுக்கு பின்னூட்டமிட இருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.
‘50 நாட்களில் மாற்றம் ஏற்பட வேண்டுமா?’ – இதற்கான பதிலை உங்கள் அனுபவங்களில் இருந்தே மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டுமே. நான் ரெடி உங்கள் அனுபவங்களை அறிந்துகொள்ள, என்ன நீங்க ரெடியா உங்கள் அனுபவங்களைப் பதிவிட?
குறிப்பு:
ஒருவரே எத்தனை அனுபவங்களை வேண்டுமானாலும் பதிவிடலாம். தினமும் நான் பதிவிடும் பதிவுகளின் பின்னூட்டத்திலேயே அந்தப் பதிவு உங்களுக்குள் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை தொடர்ச்சியாக பதிவிட்டுக்கொண்டே வரலாம். உங்கள் ஒவ்வொரு அனுபவத்தையும் பகிர்வேன். இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் பின்னூட்டத்திலேயே கேளுங்கள். பதில் அளிக்கக் காத்திருக்கிறேன். இங்கு பதிவிட இயலாதவர்கள் Compcare K Bhuvaneswari – CKB சென்று பதிவிடுங்கள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP