ஜம்முனு வாழ காம்கேரின் OTP-1000: அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

 

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 1000
செப்டம்பர் 26, 2021 | ஞாயிறு | காலை: 6 மணி

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

இன்று இரண்டு பதிவுகள். ஒன்று இதோ. இரண்டாவது இங்கே: https://compcarebhuvaneswari.com/?p=9650

ஒருசிலர் என்னிடம் ‘1000-வது நாள் கொண்டாட்டத்தை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து சிறப்பு விருந்தினர்களை வரச்செய்து மிகச் சிறப்பாக செய்யலாமே’ என சொன்னார்கள்.

அவர்களுக்கு நான் என்ன பதில் சொன்னேன் தெரியுமா?

‘கடந்த 50 நாட்களாக அந்தக் கொண்டாட்டத்தைத்தான் வெர்ச்சுவலாக கொண்டாடி வருகிறேனே. 1000-வது நாளின் கொண்டாட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டுமா? என கேட்டு அழைப்பிதழையும் பொதுவெளியில் வெளியிட்டிருந்தேனே. நீங்கள்தான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் தவற விட்டீர்கள்’ – இதுதான் நான் கொடுத்த பதில்.

உண்மைதான். ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ பதிவுகளின் எண்ணிக்கை 1000-த் தொட 50 நாட்கள் இருக்கும்போதே இதை இப்படித்தான் கொண்டாட வேண்டும் என முடிவெடுத்தேன்.

‘1000-வது நாளின் கொண்டாட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டுமா?’ என அறிவித்து, இந்தத் தொடர் உங்களுக்குள் என்ன மாற்றத்தை எல்லாம் உண்டு செய்தது என கருத்திடச் சொல்லி இருந்தேன்.

யாரையும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு கருத்துச் சொல்லுங்கள், வாழ்த்துரை கொடுக்க முடியுமா, அணிந்துரை எழுதிக்கொடுங்கள் என்றெல்லாம் கேட்கவே இல்லை.

பொது அறிவிப்பை தனிப்பட்ட அழைப்பிதழாக ஏற்று என் எழுத்தையும் பிற படைப்புகளையும் கொண்டாடிய அனைவருக்கும் நன்றி. நன்றி. நன்றி. இந்த வார்த்தையை என் மனதில் இருந்து ஆத்மார்த்தமாக சொல்வதைத் தவிர வேறெதையும் சொல்லத் தெரியவில்லை. சொல்வதற்கு பொருத்தமான வார்த்தையும் இல்லை.

என் அழைப்பை மதித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தினந்தோறும் வாசித்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தார்கள். ஒருசிலர் குடும்பமாக கலந்துகொண்டார்கள். மகிழ்வித்து மகிழ்ந்தார்கள். அத்தனை பேருமே தங்கள் மனதில் உள்ளதை உள்ளது உள்ளபடி மறைக்காமல் எந்தவித ஈகோவும் இல்லாமல் கவிதையாக, கட்டுரையாக, ஓவியமாக சமர்ப்பணம் செய்து அசத்தி விட்டார்கள்.

அவர்கள்தான் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள். என் எழுத்தின் தீவிர வாசகர்களை,  நலன் விரும்பிகளை,  நண்பர்களை அழைத்து என் ஃபேஸ்புக் பேஜில் வெர்ச்சுவல் மேடை அமைத்துக்கொடுத்து கவிதை எழுதவும், கருத்துச் சொல்லவும், ஓவியம் வரையவும் சூழலை ஏற்பாடு செய்துகொடுத்திருந்தது பெரு மகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சி நான் நினைத்ததைவிட பிரமாண்டமாய் அமைந்தது மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டது.

அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்!

—-

சுடச் சுட அசத்திய வாழ்த்துகள்!

முத்தாய்ப்பாக என்னுடைய உருவத்தை காகிகத்தில் பென்சில் ஸ்கெட்ச் செய்து ஓவியமாக்கிய கோபிகா முருகேஷ் அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி. வரைந்ததுடன் விட்டாரா, அதை லேமினேட் செய்து எனக்கு கொரியர் அனுப்பி அசத்தி அன்பில் நெகிழச் செய்துவிட்டார்.

கமலா முரளி அவர்கள் அழகுத் தமிழில் அற்புதமாய் கவிதை எழுதி அனுப்பி திக்குமுக்காடச் செய்துவிட்டார்.

‘இலட்சம் பதிவுகள் வர மகா தமிழ் வாழ்த்துகிறது’ என்று தன் யு-டியூப் சேனல் சார்பாக திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செளந்தர மகாதேவன் அவர்களும் வாழ்த்தியுள்ளார்.

இன்று காலையில் ‘நீதிநெறி உணர் மாந்தராகி வாழும் நிலை உணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்’ என்ற வாழ்த்துரையுடன் பதிவிட்ட சித்திரை சிங்கர் சங்கரநாராயணன் பாலசுப்ரமணியன் அவர்கள் முதல் வாழ்த்தாக வாழ்த்தி பதிவிட்டு அசத்தியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் அன்பார்ந்த நெஞ்சார்ந்த நன்றிகள்.

கிருஷ்ண. வரதராஜன்!
பி.வி. புஷ்பவல்லி!
அருள்நிதி நட்டார்!
சரோஜா ரகுநாதன்!
வி. ராஜாராமன்!
எஸ். மாலதி!
பிரசன்னன்!
கமலா முரளி!
ராமச்சந்திரன் சேதுரத்தினம்!
பழனீஸ்வரி தினகரன்
முருகேஷ் பாலகிருஷ்ணன்!
இலக்கியா
கோபி சரபோஜி
பத்மா சேகர்!
ரவிகுமார் சம்பத்குமார்!
சாந்தா தேவி!
ராம்குமார்
பானு கணேசன்
நல்லதம்பி
கா. வசந்தகுமாரி
குமரன் கந்தசாமி
மலர் டிஎஸ்பி செல்வம்!
விவேகபாரதி ரமணன்
கண்ணன் சரண்யா
பா. சொக்கலிங்கம்!
பவளமணி ஆனந்த முருகேசன் 
Er. செந்தில்குமார் ஆராமிர்தம்
நித்யஸ்ரீ
உதயபாபு!
ஷெண்பா பாலச்சந்திரன்
லயன் ஜே. பாஸ்கரன்
வசுதா சிவசுப்ரமணியன்
மாரியப்பன்
ரேணுகா தேவி!
ரவி ரவிகுமார்!
ப்ரியா கிஷோர் (ப்ரியம்வதா சுப்பிரமணியன்)!
வெங்கடசேஷன் சங்கர்!
இரா. இராஜ்குமார்!
கிருபா!
பனசை நடராஜன், சிங்கப்பூர்
மதுராம்பாள்!
மு. கோபிகா!
S.ரெஜினா மேரி
முனைவர் சௌந்தர மகாதேவன்
சுரேஷ்பாபு கிருபா
அ. வனிதா!
வசுமதி சிவானந்தம்

தவிர தினமும் என் பதிவுகளை வாசிப்பவர்கள் 1000-க்கும் மேற்பட்டவர்கள் என்பதை ஃபேஸ்புக் ஸ்டேட்டிஸ்டிக் பார்த்து தெரிந்துகொள்கிறேன். அனைவருமே லைக்கும், கமெண்ட்டும் செய்வதில்லை. அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை. வாசிப்பதே அங்கீகாரம்தான். அவர்களுக்கும் என் நன்றிகள்.

—-

வேண்டுகோள்!

என்னுடைய 10 வயதில் இருந்து தினந்தோறும் எழுதி வருவதை நான் அடிக்கடி குறிப்பிட்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்தந்த வயதில் நான் பெற்றதையும், கற்றதையும் எழுதி வந்தேன். அவை முன்னணிப் பத்திரிகைகளிலும் வெளியாகி பெருத்த வரவேற்பை பெற்றன. காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகு தொழில்நுட்பப் புத்தகங்கள் வெளியிட ஆரம்பித்தேன். வாழ்வியல் கட்டுரைகளை மீடியாக்களில் வெளியிட்டு வந்தேன்.

தொழில்நுட்பம் என் பணி. அதில் கிடைக்கும் அனுபவங்களை வாழ்வியலுடன் இணைத்து கொடுப்பது என் திறன். இரண்டையும் சரிவர பயன்படுத்துவதால் வாழ்க்கை உற்சாகமாக உள்ளது.

கடந்த 2-1/2 ஆண்டுகளாக ஃபேஸ்புக்கில் நான் எழுதிவருபவை வெறும் சமூக வலைதளப் பதிவுகள் மட்டும் அல்ல.

இந்தப் பதிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் அச்சுப் புத்தகங்களாகவும், இ-புத்தகங்களாகவும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

அத்துடன், நாங்கள் தயாரிக்கும் ஆவணப்படங்களிலும், கார்ப்பரேட் வீடியோக்களிலும், அனிமேஷன் படைப்புகளிலும் இந்தப் பதிவுகளை நேரடியாகவோ அல்லது அவற்றில் உள்ள கருவை மட்டுமோ எடுத்துப் பயன்படுத்தியும் வருகிறேன்.

இவ்வளவு ஏன், சின்னத்திரை மற்றும் பெரிய திரை படைப்புகளிலும் என் அனுமதி பெற்று இந்தப் பதிவுகளில் நான் எழுதிய கான்செப்ட்டுகளை உரிய சன்மானமும் கொடுத்து, என் பெயருக்கும் எங்கள் நிறுவனப் பெயருக்கும் கெளரவமும் செய்து பயன்படுத்தி உள்ளார்கள்.

எனவே, என்னுடைய பதிவுகளில் உள்ள விஷயங்களை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் அவற்றை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக கான்செப்ட்டை மட்டும் எடுத்து படைப்புகளாக்க விரும்பினால் என்னிடம் முறையாக அனுமதி பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அனுமதி பெறாமல், என் கவனத்துக்கு வராமல் பயன்படுத்தும் எந்த ஒரு பதிவானாலும் அது ஒருவகையில் ‘திருட்டே’.

இறைவனுக்கும், இயற்கைக்கும், குடும்பத்துக்கும், உங்கள் அனைவருக்கும் நன்றி!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 602 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon