ஃபேஸ்புக்கில் பதிவுகள் சித்திர எழுத்துகளாக வெளிப்படுகிறதா?

ஃபேஸ்புக்கில் ஃபாண்ட் பிரச்சனையா?

ஃபேஸ்புக்கில் நீங்கள் பதிவிடும் தகவல்களை  ஸ்மார்ட்போனில் பார்வையிடும்போது அது சித்திர எழுத்துக்களாக வெளிப்படுகிறதா?

ஃபேஸ்புக்கில் தோராயமாக 63000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம், கமெண்டுகளில் தோராயமாக 8000 எழுத்துக்கள் (வார்த்தைகள் அல்ல Characters) வரை பதிவிடலாம் என்றாலும்,

சரியான யுனிகோட் ஃபாண்ட்டை பயன்படுத்தி இருந்தாலும்….

போன்  செட்டிங்கில் எந்தவித மாற்றமும் செய்யாமல், தமிழ் ஃபாண்ட்டுகள்  உடையாமல் நாம் பதிவிடும் தகவல்கள்  எல்லா போன்களிலும் வெளிப்பட வேண்டும் என்றால் பதிவிடும் தகவல்களை 1000 to 1250 வார்த்தைகளுக்குள் (இங்கு நான் குறிப்பிட்டிருப்பது Words) கொண்டு வரலாம்.

அப்படி இல்லை என்றால்  உங்கள் ஸ்மார்ட் போன் ஐபோன், விண்டோஸ் போன், ஆண்ட்ராய்ட் இவற்றில் எந்த வகையாக  இருந்தாலும்,  அவற்றில்  சித்திர எழுத்துக்களாக வெளிப்பட வாய்ப்பு உண்டு.

போன் செட்டிங்கில் மாற்றம் செய்துகொள்ளத் தேவையிருக்கும்.

சித்திர எழுத்துக்களாக வெளிபடுவதை தவிர்க்க இயலாதா?

நிச்சயம் தவிர்க்கலாம்.

இது ஃபாண்ட் சம்மந்தப்பட்ட பிரச்சனை. நீங்கள்  பயன்படுத்தும்  ஃபாண்ட் (யுனிகோட்) சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.

எந்த ஸ்மார்ட்போன் (ஐபோன்/விண்டோஸ்/ஆண்ட்ராய்ட்) பயன்படுத்துகிறீர்களோ அதன் செட்டிங்கில் மாற்றம் செய்ய வேண்டும்.

செட்டிங்கில் மாற்றம் செய்யாமல் வார்த்தைகள் சரியாத வெளிப்படாதா?

தற்சமயம் ஆராய்ந்ததில் 1000 – 1250 வார்த்தைகளுக்கு உட்பட்ட பதிவுகளாக இருந்தால் வார்த்தைகள் உடைவதில்லை. சரியாக வெளிப்படுகிறது. வார்த்தைகளின் எண்ணிக்கை இதற்கு மேல் சென்றால் ஸ்மார்ட் போன் செட்டிங்கில் மாற்றம் செய்ய தேவையிருக்கும்.

ஃபேஸ்புக்கில் பதிவுகளுக்கான  சில டிப்ஸ்:

  1. நீண்ட பதிவுகளாக இருந்தால் எம்.எஸ்.வேர்டில் டைப் செய்யுங்கள். பிறகு காப்பி செய்து ஃபேஸ்புக்கில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.
  2. வார்த்தை எண்ணிக்கை (Word Count) செய்வது சுலபம்.
  3. ஃபேஸ்புக்கில் பதிவிட இருக்கும் தகவல்களை சுருக்கமாக எழுதுங்கள்.
  4. நீண்ட பதிவுகளாக இருந்தால் பெரும்பாலானோர் படிப்பதில்லை.
  5. பதிவுகள் பெரியதாக இருந்து அத்தனையையும் சொல்ல வேண்டி வந்தால் அந்தப் பதிவை பிரித்து பல  பதிவுகளாக Part-1, Part-2 என பெயரிட்டு போஸ்ட் செய்யுங்கள்.
  6. மேலும் எம்.எஸ்.வேர்டில் டைப் செய்யும்போது ஒரு பத்திக்கும் அடுத்த பத்திக்கும் கீபோர்டில் இரண்டு முறை Enter கீ அழுத்தி இரண்டு ஸ்பேஸ் கொடுத்தால் ஃபேஸ்புக் போஸ்ட்டில்  இடைவெளியோடு அந்தப் பதிவு படிப்பதற்கு வசதியாக வெளிப்படும்.
  7. ஒருமுறை Enter கீ அழுத்தி டைப் செய்யப்படுபவை படிப்பதற்கு வசதியாக இல்லாமல் தொடர்ச்சியாக ஒரே அடைப்பாக வார்த்தைகள் வெளிப்பட்டு கண்களை உறுத்தும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,  CEO
Compcare Software Private Limited

ஏப்ரல் 12, 2019

(Visited 132 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon