தொலைக்காட்சி நிகழ்ச்சி / ஆவணப்பட இயக்குனராக!

தொலைக்காட்சி நிகழ்ச்சி கிரியேடிவ் டைரக்டராக! 

1992 முதல் இன்று வரை

500  படைப்புகளுக்கும் மேற்பட்டவை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எனக்கு புதிதல்ல.

ஜெயா டிவி, மக்கள் தொலைக்காட்சி, பொதிகை போன்ற தொலைக்காட்சிகளிலும், அயல்நாட்டு தமிழர்களுக்கான சில தொலைக்காட்சிகளிலும் பல்வேறு தொழில்நுட்பத் தொடர்களை நடத்தி இருக்கிறேன். எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியும் இருக்கிறேன். இன்றும் தொடர்கிறேன்

 கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் பிரபலமாகாத 1992-களில் இருந்து  எங்கெல்லாம் தொழில்நுட்பத் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம், என் நிறுவனம் மூலம் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அறிவை பத்திரிகை, புத்தகங்கள், தொலைக்காட்சி, வானொலி, ஆப்ஸ், யு-டியூப் சானல் மூலம் பெருவாரியான மக்களுக்குக் கொண்டு செல்வதில் நிறைவுதான்.

ஒருசில வெப்டிவி சானல்களையும், யு-டியூப் சானல்களையும் எங்கள் காம்கேர் நிறுவனம் மூலம் வடிவமைத்து நிர்வகித்தும் வருகிறோம்.

எல்லாவற்றுக்கும் ஓர் ஆரம்பப் புள்ளி இருக்கும்தானே?

அது  2000-ம் ஆண்டு ஒரு  வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கான  தொலைக்காட்சி (TTN-Tamil Television Network)  நேர்காணலில் ஆரம்பமானது. அதுவே என் தொலைக்காட்சி நிகழ்ச்சிளுக்கான தொடக்கம். நான் கொடுத்த முதல் தொலைக்காட்சி பேட்டியும் அதுவே.

2001-ம் ஆண்டு  TTN  தொலைக்காட்சியிலேயே கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிகழ்ச்சியை 300 எபிசோடுகளுக்கும் மேல் தயாரித்து வழங்கினேன். ஒவ்வொரு எபிசோடும் 1/2 மணி நேரம்.

எண்ணம்-எழுத்து-இயக்கம் என டைட்டிலில் என் பெயர் வெளிப்பட என் தலைமையில் நானே நிகழ்ச்சியையும் இயக்க வேண்டும், நிகழ்ச்சியையும் நானே நடத்த வேண்டும். கேமிரா முன் பேசிக்கொண்டே ஒட்டுமொத்த ஷூட்டிங் டீமும் என் கண்ணசைவில்.

ஆஹா அற்புதமான அனுபவம். 300 எபிசோட்கள் தயாரித்த அனுபவம் வாழ்நாள் முழுவதற்குமான தன்னம்பிக்கையை அள்ளிக் கொடுத்தது.

2001-ம் ஆண்டு, ஜெயா டிவியில் காலைத் தென்றலில் என் நேர்காணல்.

2001-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 வருடங்கள் ஜெயா டிவியில் பெண்களுக்காக கம்ப்யூட்டர்  கல்வி மற்றும் தொழில் ஆலோசனைகள் வழங்கும்  நிகழ்ச்சி.

2005-ம் ஆண்டு பொதிகை டிவியில் லேடீஸ் ஸ்பெஷல் தயாரித்த நிகழ்ச்சியில் பெண்களுக்கான தொழில்நுட்பத் தொடர் ஒரு வருடம்.

2017 -ல் மக்கள் தொலைக்காட்சியில் ‘திறமையை சம்பாத்யமாக்கும் மினி தொழில்நுட்பத் தொடர்’.

2017 –ல் பொதிகையில் ஒளிபரப்பான நேர்காணல் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. காரணம். அந்த நேர்காணல் காம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் வெளியான என் 100-வது புத்தகம் குறித்தும், எங்கள் நிறுவன தயாரிப்புகள் குறித்தும் என் ஒட்டுமொத்த 25 வருட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் அற்புத வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். 30 நிமிட நிகழ்ச்சி. அதுவும் நேரலையாக . (https://www.youtube.com/watch?v=b05d3j8Bh3Y&feature=youtu.be&t=26m11s )

2019-ல் விகடன் டிவியிலும் (https://www.facebook.com/vikatanweb/videos/421217288607745/),

2019-ல் வின் டிவியிலும் https://www.youtube.com/watch?v=QlADvAmU1MM. ,

இப்படியாக என் நான் பெற்றுவரும் தொழில்நுட்ப அனுபவங்களை தொலைக்காட்சி மூலமும் பரவலாக மக்களுக்குக் கொண்டு சென்றுகொண்டிருப்பதில் மனநிறைவு.

ஆவணப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும்

1992 முதல் இன்று வரை

ஆவணப்படங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் அப்பா அம்மாவுக்கும் எங்களுக்குமான புரிதல், அன்பு, நட்பு போன்றவற்றை வரும் தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில்   ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ என்ற ஆவணப்படத்தை (1-1/2 மணி நேரம்) இயக்கினேன். இதுவே நான் இயக்கிய முதல் ஆவணப்படம். https://youtu.be/k0CFnRpqjnk

அடுத்து  இந்திய மேற்கல்விக்கும், அயல்நாட்டு மேற்படிப்புக்குமான ஒப்பீடு (Comparative Study of Higher Studies in USA & in India) என்ற ஆவணப்படத்தை அமெரிக்காவில்  மிசெளரியில் உள்ள புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஷீட்டிங் எடுத்து தயாரித்தேன். இந்த அனுபவம் விஷூவல் மீடியா  துறையில் சாதிப்பதற்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து தனி நபர்  மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுக்காக ஆவணப்படங்கள் தயாரிக்க ஆரம்பித்தேன்.

(Visited 59 times, 2 visits today)
error: Content is protected !!