அனிமேஷன் கார்ட்டூன் படைப்புகள்  தயாரிப்பாளராக!

அனிமேஷன் முதல் ஆப்ஸ் வரை  

Since 1992 

200 – படைப்புகளுக்கும் மேற்பட்டவை

கிரியேட்டிவிடியே என் அடிப்படை. எழுத்தில் தொடங்கிய என் திறமை கால மாற்றத்துக்கு ஏற்ப கார்ட்டூன் அனிமேஷன் பக்கம் நகர்ந்தது.  முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’.

இதற்குக் கிடைத்த வரவேற்பின் உற்சாகத்தில் ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ என்ற அனிமேஷன் படைப்பை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களை வைத்து தயாரித்தோம். அதற்கும் பெருத்த வரவேற்பு கிடைத்தது.

அடுத்தடுத்து  இராமாயணக் கதைகள், முல்லா கதைகள், ஈசாப் கதைகள், தெனாலிராமன், தினம் ஒரு பழம், தமிழ் கற்க, மழலை முத்துக்கள், மழலை மெட்டுக்கள், மழலைச் சந்தம் என எங்கள் அனிமேஷன் படைப்புகள் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தன.

அனிமேஷனில் கந்தர் சஷ்டிக்கவசம் பாடலை அனிமேஷன் மற்றும் அதன் விளக்கத்துடன் தயாரித்தபோது அது எங்கள் ஆகச்சிறந்தப் படைப்பானது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும்விதத்தில் நாங்கள் உருவாக்கியிருந்த மல்டிமீடியா படைப்புகளான திருவாசகம், திருக்குறள் போன்றவை எங்கள் காம்கேர் நிறுவனத்தின் அடையாளமானது.

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாற்றில் தொடங்கிய கல்வித்துறைப் படைப்புகளுக்கான எங்கள் அனிமேஷன் பயணம் பள்ளி மற்றும் கல்லூரி பாடதிட்டங்களுக்காக இன்றுவரை பயணப்பட்டு வருகிறது.

இப்போது  மொபைலில் கதைசொல்லி ஆப்ஸ்களை வெளியிடும் முயற்சியில் இருக்கிறோம்.

(Visited 115 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon