அறம் வளர்ப்போம் 20-26

அறம் வளர்ப்போம்-20
ஜனவரி 20, 2020

நம்பிக்கை – குழப்பமின்மை, உறுதியாக இருத்தல், கவனக்குவிப்பு

எந்த ஒரு செயலையும் குழப்பமில்லாமல் செய்வதற்கு அந்த செயலை நம்பிகையுடன் தொடங்க வேண்டும். ஆக, குழப்பமின்மை நம்பிக்கையைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது.

நாம் எடுத்துக்கொண்ட முயற்சி எதுவாக இருந்தாலும் அதை உறுதியாகப் பற்றிக்கொண்டு செயல்படும்போது நமக்குள் நம்பிக்கை ஊற்றெடுக்கும்.

எந்த ஒரு செயலையும் முழு கவனத்துடன் செய்யும்போது அந்த செயல் மீதான நம்பிக்கை உறுதி செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவடைவது நிச்சயம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-21
ஜனவரி 21, 2020

மனிதாபிமானம் – அன்பும் பரிவும், இரக்க உணர்வு, பிறரை மதித்தல்

அன்புடனும் பரிவுடனும் பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்துப் பழகுவது மனிதாபிமானம்.

பிறர் துன்பம் கண்டு இரக்கப்படுவதும் இயன்ற உதவிகள் செய்வதும் மனிதாபிமானமே.

நம்மைப் போலவே பிறரையும் கருதி மதிப்பளித்தலும் மனிதாபிமானம்தான்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-22
ஜனவரி 22, 2020

அறிவுரை – அனுபவங்கள், வழிகாட்டுதல், நல்வழிப்படுத்துதல்

நம்மைவிட வயதில் பெரியர்கள் சொல்லும் அறிவுரைகள் அவர்கள் அனுபவங்களின் பிரதிபலிப்பாக இருப்பதால் அவை உங்கள் வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும்.

பெற்றோரும் ஆசிரியரும் கூறும் அறிவுரைகள் உங்கள்  வாழ்க்கைக்கு வழிகாட்டும் நல்விளக்குபோல அமையும்.

அறிவுரைகள் உங்களை நல்வழியிலும் நேர்வழியிலும் வழிநடத்தும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-23
ஜனவரி 23, 2020

ஒற்றுமை – பிறரைப் புரிந்துகொள்ளுதல், சகோதரத்துவத்துடன் பழகுதல், இணக்கமாக இருத்தல்

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை கேள்விப்பட்டிருப்போம். பிறரை புரிந்துகொள்வதன் மூலம் நம்மால் அவர்களுடன் ஒற்றுமையாக வாழ முடியும்.

வாழ்க்கையில் நம்முடன் பயணிப்பவர்களை சகோதரத்துவத்துடன் அணுகும்போது ஒற்றுமை உணர்வு தானகவே உண்டாகும்.

பிறரை புரிந்துகொண்டு, சகோதரத்துவத்துடன் நடந்துகொள்ளும்போது அவர்களுடன் நல்ல இணக்கமாக பழகும் மனோபாவம் தானாகவே உண்டாகும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-24
ஜனவரி 24, 2020

அங்கீகாரம் – பிறரால் ஏற்றுக்கொள்ளப்படுதல், பாராட்டப்படுதல், பயன்கொடுத்தல்

நாம் செய்கின்ற செயல்களை மற்றவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு பாராட்டுவதை அந்த செயல்களுக்கான அங்கீகாரம் என எடுத்துக்கொள்ளலாம்.

செய்கின்ற செயல்களை மனநிறைவுடன் செய்யும்போது அந்த செயல்கள் பிறராலும் பாராட்டப்படும் வகையில் அமைந்துவிடும்.

எடுத்துக்கொண்ட பணிகளை திருப்தியாக கொண்டாட்ட மனநிலையில் செய்தால் அந்த பணி நமக்கு மட்டுமில்லாமல் பிறருக்கும் பயன்கொடுக்கும் வகையில் அமைந்துவிடும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-25
ஜனவரி 25, 2020

சந்தோஷம் – நம்மை மகிழ்வித்தல், பிறரை மகிழ்வித்தல், நேர்மறை எண்ணங்களை பரவவிடுதல்

சந்தோஷம் என்பது நாம் செய்கின்ற ஒரு செயலால் அல்லது நமக்கு விருப்பமானதை பெறுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி.

சந்தோஷமான மனநிலை அல்லது சூழல் நம்மை மட்டுமில்லாமல் பிறரையும் மகிழ்விக்கவல்லதாக இருக்கும், இருக்க வேண்டும்

சந்தோஷமான சூழல் கொடுக்கின்ற நேர்மறை எண்ணங்கள் நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவிக்கொண்டே இருக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-26
ஜனவரி 26, 2020

நேர்மை –  குறுக்கு வழியில் செல்லாமல் இருத்தல், பிறரை ஏமாற்றாமல் இருந்தல், ஈடுபாட்டுடன் செயல்படுவது.

நேர்மை என்பது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கின்ற பேராசையில் குறுக்கு வழியில் சென்று சம்பாதிக்க முயலாமல் நேர்வழியில் செல்வது.

எந்தக் காரணம் கொண்டும் பிறரை ஏமாற்றாமல் இருத்தல்.

நேர்மையாக இருப்பது என்பது, தான் செய்கின்ற பணிகளை முழுமனதுடனும் பரிபூரண ஈடுபாட்டுடனும் செய்வது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 214 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon