அமேசானில் நான் எழுதிய இ-புத்தகங்கள் விலை அதிகம் இருப்பது ஏன்?

அமேசானில் ‘நீங்களாகவே இ-புத்தகம் வெளியிடுவது எப்படி?’ என்ற இ-புத்தகத்தை வாங்கிய வாசகர் ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் போன் செய்து, ‘அமேசானில் உங்கள் இ-புத்தகங்கள் விலை அதிகம் இருப்பது ஏன்? என்று கேட்டார்.

அவருக்கு நான் சொன்ன பதிலை பொதுவில் பகிர்கிறேன். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அச்சுப் புத்தகங்களை கொரியரில் அனுப்ப வேண்டுமென்றால் புத்தகத்தின் எடைக்கு ஏற்பவும் எந்த ஊருக்கு அனுப்ப வேண்டுமோ அதற்கு ஏற்பவும்தானே கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள் கொரியர் அலுவலகத்தில். அச்சுப் புத்தகத்தின் எடை அதிகமாக இருந்தால் கொரியர் கட்டணமும் அதிகமாகத்தானே இருக்கும்.

உதாரணத்துக்கு இரண்டு கிலோ எடையுள்ள புத்தகத்தையும், அரை கிலோ எடையுள்ள புத்தகத்தையும் சென்னையில் இருந்து தஞ்சை அனுப்ப வேண்டும் என்றால் கொரியர் கட்டணம் வேறுபடும் தானே. இரண்டு கிலோ எடையுள்ள புத்தகத்துக்குக் கட்டணம் அதிகமாகவும், அரை கிலோ எடையுள்ள புத்தகத்துக்குக் கட்டணம் குறைவாகவும் இருப்பதுதானே நடைமுறை.

அதுபோல தான் இ-புத்தகங்களை அமேசானில் வெளியிடும் போது அதற்கான விலையை நிர்ணயம் செய்வது நாம்தான் என்றாலும், அதிலும் சில விதிமுறைகளை வைத்துள்ளார்கள்.

நீங்கள் இ-புத்தகமாக தயாரிக்கும் ஃபைலின் அளவை (File Size) பொறுத்து குறைந்தபட்ச விலை இவ்வளவுதான் வைக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்திருக்கிறார்கள்.

ஃபைலின் அளவு சிறியதாக இருந்தால் 49 ரூபாய் கூட குறைந்தபட்ச விலையாக வைக்க முடியும். ஃபைலின் அளவு அதிகமாக இருந்தால் 99 ரூபாய்தான் குறைந்தபட்ச விலையாக வைக்க முடியும். 49, 99 என்ற கணக்கெல்லாம் எந்த நேரத்திலும் வேறுபடலாம். ஃபைலின் அளவுக்கு ஏற்ப மாறுபடும். இங்கு உதாரணரத்துக்காக (மட்டுமே) சொல்லி இருக்கிறேன்.

அமேசானில் வாடிக்கையாளர்கள் வாங்கும் இ-புத்தகத்தை அவர்களின் சாதனத்துக்கு அனுப்புவதற்கான டெலிவரி கட்டணத்தை இ-புத்தகத்தை வெளியிட்டிருக்கும் நூலாசிரியர்களிடம் இருந்துத்தான் வசூலிக்கிறார்கள். அந்தக் கட்டணம் File Delivery Cost எனப்படுகிறது. இது அவர்களுக்கு நூலாசிரியர்கள் கொடுக்கும் கமிஷனிலேயே சேர்க்கப்பட்டுவிடும்.

ஃபைலின் அளவு அதிகமுள்ள இ-புத்தகங்களின் விலை அதிகம், டெலிவரி கட்டணமும் அதிகம். விலை அதிகம் என்பதுதான் வாசகர்களுக்கு வெளிப்படையாக வெளியில் தெரியும். டெலிவரி கட்டணம் எல்லாம் நூலாசிரியர்களுக்கும் அமேசானுக்கும் இடையே உள்ள பரிவர்த்தனை.

எனது புத்தகங்கள் மல்டி மீடியா புத்தகங்கள் போல விளக்கப்படங்களுடன் வாசகர்கள் Step by Step ஆக பார்த்து செயல்முறையில் செய்துபார்த்து புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கும். இந்த விஷயம் தொடர்ச்சியாக என் தொழில்நுட்பப் புத்தகங்களை வாசிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். ஏராளமான படங்களுடன் (Images) வடிவமைக்கப்படும் இ-புத்தகங்களின் விலையை நாமே நினைத்தாலும் குறைவாக வைக்கவே முடியாது. ஒரே காரணம் ஃபைலின் அளவு.

அத்துடன் எனது புத்தகங்களின் பக்கங்களும் அதிகம். இமேஜ்களுடன் வடிவமைக்கப்படும் நுட்பத்தினால் ஃபைலின் அளவும் அதிகம். இப்படி பல காரணங்களினால் என்னுடைய இ-புத்தகங்கள் விலை அதிகமாக உள்ளது.

அமேசானில் வெளியிட்டுள்ள எனது இ-புத்தகங்களை உங்கள் ஸ்மார்ட்போனிலேயே வாசிக்கலாம். ஐபேட், டேப்லெட், கிண்டில் சாதனங்களிலும் படிக்கலாம்.

தொழில்நுட்பத்துக்காகவே 125-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய அனுபவத்தில் இந்த இ-புத்தகத்தையும் ஏராளமான விளக்கப் படங்களுடன் (என் ட்ரேட் மார்க்கே இதுதானே!) எழுதி வெளியிட்டுள்ளேன்.

புத்தகத்தின் விலை: நீங்களாகவே இ-புத்தகம் வெளியிடுவது எப்படி?

காம்கேர் நிறுவன வெளியீடு. விலை ரூபாய். 200/-.

அமேசான் லிங்க்: https://www.amazon.in/dp/B07ZG34N9T

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

மே 16, 2020

(Visited 8 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari