#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’
2019 – ஜனவரியில் ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவாகத் தொடங்கி 2020-ல் ‘ஹலோ with காம்கேர்’ பதிவுகளாக தொடரும் என்னுடைய விடியற்காலை பதிவுகள் 670 நாட்களையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் வாசகர்களாகிய உங்கள் கேள்விகளுக்கும் பதில் அளிக்கலாம் என்ற எண்ணத்தில் ‘கேள்வி கேளுங்கள், பதில் கொடுக்கப்படும்!’ என்ற கான்செப்ட்டில் ஒரு பகுதியை கொண்டு வந்துள்ளேன்.
நான் எழுதிவரும் ‘ஹலோ With காம்கேர்’ பதிவுகளில் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் வெளிவர விரும்பினால் இந்த பதிவின் கமெண்ட் பகுதியிலேயே கேள்விகளைப் பதிவிடுங்கள். பதிவிடும்போது #ask_CKB என்ற ஹேஷ் டேகை பயன்படுத்துங்கள்.
உதாரணம்: #ask_CKB ‘எப்போதும் இன்முகத்துடன் இருப்பது சாத்தியமா?’
உங்கள் கேள்விகள் உங்கள் பெயருடன் வெளிவரும். பதில்கள் என் இணையதளத்தில் வெளிவரும். இங்கும் (ஃபேஸ்புக்கில்) முன்னோட்டத்துடன் பகிர்வேன்.
முக்கிய குறிப்பு
- என் பர்சனல் வாழ்க்கை குறித்த கேள்விகளை தவிர்க்கவும்.
- கேள்விகள் இந்தப் பதிவின் கமெண்ட்டில் (#ask_CKB என்ற ஹேஷ் டேகுடன்) மட்டுமே கேட்க வேண்டும்.
- தனித்தகவலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படமாட்டாது. எனவே மெசஞ்சர், வாட்ஸ் அப் என கேள்விகளை அனுப்ப வேண்டாம்.
- நியாயமான கேள்விகளுக்கு பதில் கொடுக்கப்படும்.
- கண்ணியக் குறைவான கேள்விகளும், பர்சனல் கேள்விகளும் பின்னூட்டத்தில் இருந்து நீக்கப்படும்.
- என் கேள்விக்கு ஏன் பதில் அளிக்கவில்லை என எந்த கேள்வியும் கேட்க வேண்டாம். ஏனெனில் உங்கள் கேள்விக்கு தக்க பதில் என் மனதில் உதிக்கும்போது நிச்சயம் பதில் அளிப்பேன்.
நன்றி
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software