ஹலோ With காம்கேர் -327: இன்லெண்ட் லெட்டர் வந்ததா?


ஹலோ with காம்கேர் – 327
November 22, 2020

கேள்வி: இன்று கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. இன்லெண்ட் கடிதம் அனுப்பி உள்ளேன். படிக்கிறீர்களா?

நீண்ட கடிதம்தான். பொறுமையாக படியுங்களேன்.

அன்புள்ள வாசகர்களுக்கு,

நலம். நலம் அறிய அவா.

எனக்கு இந்த ஐடியை தவிர வேறு பர்சனல் ஐடி எதுவும் கிடையாது.  ‘காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் ஃபேஸ்புக் பேஜ் உள்ளது.

எனவே இந்த ஐடியைத் தவிர வேறெங்கிருந்தும் நான் அனுப்புவதைப் போல நட்பு அழைப்பு வந்தால் ஏற்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஃபேஸ்புக்கில் என் நட்பு வட்டத்தில் இருந்து தானாகவே ஒருசிலர் நீக்கப்பட்டிருந்ததை (நான் நீக்காமல்) சொல்லி இருந்தேன் அல்லவா?

அதுபோல நான் ஏற்காத ஒருசிலரது நட்பு அழைப்புகளும் தானாகவே நட்பு வட்டத்தில் சேர்ந்திருந்தது (நான் சேர்க்காமலேயே).

சமீபமாக ஃபேஸ்புக்கில் Fake Id – க்கள் உருவாகி வருகிறது. அதாவது உங்கள் பெயரில் மற்றொரு ஐடியை உருவாக்கி அதை வைத்துக்கொண்டு நீங்கள் செயல்படுவதைப் போலவே செயல்படும் நபர்களுக்கு Fake Id என்று பெயர்.

அங்கிருந்து உங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு நட்பு அழைப்பு செல்கிறது, தவறான வீடியோக்களும், புகைப்படங்களும் அவர்களுக்கு மெசஞ்சரில் அனுப்பப்படுகிறது. உங்கள் நண்பர்கள் நீங்கள்தான் அவற்றை அனுப்புகிறீர்கள் என நினைப்பார்கள். எனவே கவனமாக இருங்கள்.

இது குறித்து ஃபேஸ்புக்கிற்கு ரிப்போர்ட் கொடுத்து விவரம் அறிந்து என் பெயரில் உலாவி வந்த Fake ஐடியை முடக்கிவிட்டேன்.

மேலும் மெசஞ்சர் மற்றும் இன்பாக்ஸ்களை ‘One Way’ ஆக செட்டிங் செய்து வைத்துள்ளேன். தேவையில்லாமல் யாரும் மெசேஜ் அனுப்பக் கூடாது என்பதால். தேவைப்படுபவர்களுக்கு அவசியமானால் நான் மெசேஜ் அனுப்புவேன்.

‘ஹலோ வித் காம்கேர்’ பதிவுகளை படித்து வரும் வாசகர்களின் கமெண்ட்டுகளையும் Moderate செய்து வைத்துள்ளேன். அதாவது இன்னென்ன வார்த்தைகள் வந்தால் கமெண்ட்டுகள் (பின்னூட்டங்கள்) தானாகவே நீக்கப்பட்டுவிடுமாறு செட்டிங் செய்து வைத்திருக்கிறேன். தேவையில்லாமல் அரசியல், நடிகர் நடிகைகள் குறித்த கிசுகிசு வார்த்தைகள் என என் பதிவுகளின் பின்னூட்டங்கள் அமையக்கூடது என்பதால் ஒரு டெம்ப்ளேட் உருவாக்கி வைத்துள்ளேன். அதிலுள்ள வார்த்தைகள் இடம்பெறும் பின்னூட்டங்கள் தானாகவே நீங்கிவிடும்.

எனவே, உங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்பட்டால் நான் நீக்கியதாக கருத வேண்டாம். அதற்கேற்றாற்போல் நீங்கள் பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை செம்மைப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஏனெனில் புதிதாக நட்பில் இணைந்து என் பதிவுகளை வாசிக்கத் தொடங்கும் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எடுத்துச் சொல்ல நேரம் இல்லை என்பதால் இந்த ஏற்பாடு.

ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் மதிப்பளித்து கவனமாக வாசித்து நான் பதில் அளித்து வருகிறேன் என்பதும் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

என் பதிவுகளை வாசித்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:

நான் ஒரு பதிவு எழுதுகிறேன் என்றால் அது உலகளாவிய என் அனுபவத்தின் ஒரு சிறு துளி. அந்த பதிவில் சொல்லி உள்ள நிகழ்வுக்கு முன்னும், பின்னும் ஆயிரம் விஷயங்கள் நடந்திருக்கும். அவற்றை எல்லாம் 300 வார்த்தைகள் கொண்ட பதிவில் அடக்கிவிட முடியாதல்லா? மேலும் பதிவுகளில் சொல்லும் விஷயங்கள் ஏற்கெனவே என் படைப்புகளில் வெளியான கருத்துக்களாகவும் இருக்கும். ஒவ்வொரு பதிவும் ‘500 பக்கங்கள்’ கொண்ட புத்தகமாக்கும் அளவுக்கு கருத்துச் செறிவு கொண்டதாக இருக்கும். அவற்றை ‘500 வார்த்தைகளில்’ அடக்க முடியாதுதானே.

இப்படி செய்திருக்கலாமே, அப்படி செய்திருக்கலாமே என்பது போன்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்லி அலுத்துவிட்டது என்பதால் இந்த அறிவிப்பு.

என்னுடைய நோக்கம், நான் பயணிக்கும் பாதையில் எனக்குக் கிடைக்கும் அனுபவங்களை நான் சந்திக்கும் மனிதர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை நேர்மறையாக்கி உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

அவை ஒருதுளியாவது உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாகுமேயானால் அதைவிட பெருமகிழ்ச்சி வேறென்ன உண்டு சொல்லுங்கள்?

என் பதிவுகளை வாசிப்பவர்களில் எல்லா வயதினர்களும் இருக்கிறீர்கள். வயது வித்தியாசமின்றி பதவி / வேலை பாகுபாடின்றி அனைவருக்கும் நான் ஒன்றுபோலவே மரியாதை கொடுத்து வருவதும் நீங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. பரஸ்பரம் நானும் அதையே எதிர்பார்க்கிறேன். இது குறித்தும் சில பதிவுகளில் சொல்லி இருக்கிறேன்.

வாசகர்கள் அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை  கண்ணியமாகவும் நேர்மையாகவும் பின்னூட்டமிட உரிமை உண்டு.  ஆனால் என் பதிவில் பின்னூட்டமிட்டுள்ள பிறரது கமெண்ட்டுகளுக்குச் சென்று அவர்களை ஏன் இப்படி போட்டீர்கள் என கேட்டோ அல்லது அதற்கு விமர்சித்தோ பின்னூட்டமிட்டு மனஸ்தாபங்களை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அந்த பஞ்சாயத்தை தீர்ப்பது அநாவசியாமாக என் நேரத்தை வீண் அடிக்கிறது. என் பதிவின் போக்கையும் திசை திருப்புகிறது. தொடர்ச்சியாக இதுபோல செய்துவந்தால் நிரந்தரமாக நட்பு வட்டத்தில் இருந்து நீக்குவதைத் தவிர வேறு வழியில்லை.

காரணம் ஃபேஸ்புக்கில் நான் பணியாற்றவில்லை. என் நிறுவனம் காம்கேர். எனக்கான நேரத்தை என் நிறுவனத்துக்குத்தான் செலவிட முடியும்.

அனைவரின் புரிந்துணர்வுடன் ஃபேஸ்புக்கில் நான் எழுதிவரும் விடியற்காலை பதிவின் எண்ணிக்கை 692 ஐ எட்டியுள்ளது. (சென்ற வருடம் 365 நாட்கள் + இந்த வருடம் இன்று வரை 327).

என் பதிவுகளை நித்தம் படித்துவிட்டு லைக்கும், கமெண்ட்டும் போடாமால் கடப்பவர்கள், படித்துவிட்டு லைக் போடுபவர்கள், படித்து லைக் போட்டு பாராட்டி பின்னூட்டமிடுபவர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எழுதும் எனக்கும் படிக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் இன்னும் நல்ல புரிதல் இருந்தால் நான் இன்னும் செம்மையாக செயல்பட முடியும் என்பதால் இந்த விரிவான பதிவு.

பொறுமையாகப் படித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

இப்படிக்கு அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 341 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon