ஸ்ரீபத்மகிருஷ் 2013 – Trust With Kids
2013 -ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, அமெரிக்காவில் வசித்து வரும் என் சகோதரியின் பெண் அக்ஷயாஸ்ரீயின் பிறந்த நாளை, அவ்வை இல்லத்து 30 பெண் குழந்தைகளுடன் Trust with Kids என்ற சிறப்பு நிகழ்ச்சியாக குரோம்பேட்டை பாலாஜி பவன் கான்ஃபரன்ஸ் ஹாலில் கொண்டாடினோம். அதாவது, முப்பது குழந்தைகளும் 30 தீபங்களை ஏற்றி…
ஸ்ரீபத்மகிருஷ் 2012 – திருக்குறள் ஒலி ஓவியம் பார்வையற்றோருக்கான சிறப்புரை
ஓலைச் சுவடியில் எழுதப்பட்டத் திருக்குறள், தொழில்நுட்பம் வளர வளர அதற்கேற்ப, புத்தகங்களில் அச்சு வடிவிலும், ஒலி வடிவில் ஆடியோவாகவும், ஒலி-ஒளி வடிவில் மல்டிமீடியா அனிமேஷன்களாகவும், இன்டர்நெட்டில் வெப்சைட்டுகளாகவும் வளர்ந்து இன்று புதுமையான வடிவம் பெற்று புதுப்பொலிவுடன் திகழ்கிறது. எந்த ஒரு தொழில்நுட்பமும் சமுதாயத்தின் கடைநிலையில் இருக்கின்ற மனிதனைச் சென்றடையும் போது தான் அது முழுமையான வெற்றி…
ஸ்ரீபத்மகிருஷ் 2011 – ‘தானே’ புயல் நிவாரணம்
2011 டிசம்பர் மாதம் வங்கக் கடலில் உருவாகி, வலுவடைந்துள்ள ‘தானே’ புயல் காரணமாக, சென்னை, திருவள்ளுர், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கட்டிடங்கள், மரங்கள், மின் விநியோகக் கட்டமைப்பு என பலவற்றிலுமாக ஏராளமான பொருட்சேதங்களுடன் உயிர் சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. பிடுங்கியெறியப்பட்ட மரங்கள்…
ஸ்ரீபத்மகிருஷ் 2010 – விவேகானந்தர் பிறந்த நாள் விழா
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை, தேசிய இளைஞர் தினமான விவேகானந்தரின் பிறந்த நாளை ஒட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்காக ‘இயற்கையை காப்பாற்றுவோம் – பூமி வெப்பமயமாவதை தடுப்போம்’ என்ற சிறப்பு கட்டுரைப் போட்டியை 7, ஜனவரி 2010 அன்று நடத்தியது. ஜனவரி மாதம் 12-ம் தேதி மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், இப்போட்டியில்…
ஸ்ரீபத்மகிருஷ் 2009 – குழந்தைகள் தினவிழா
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையின் சார்பில், நவம்பர் 14, 2009 அன்று மைலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷின் மாணவர்கள் இல்லத்தில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் இந் நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ணா மிஷின் மாணவர்கள் இல்லச் செயலாளர் தவத்திரு ஸ்வாமி சத்யஜானாநந்தா, தாளாளர் ஸ்வாமி இந்துநாதாநந்தா முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன், திருமதி. சாவித்திரி ராமகிருஷ்ணன், பருத்தியூர் டாக்டர். சந்தானராமன் மற்றும்…
ஸ்ரீபத்மகிருஷ் 2008 – எங்கள் வீட்டு குழந்தைகள் தினம்
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா “எங்கள் வீட்டுக் குழந்தைகள் தினம்-2008” என்ற பெயரில் ஆகஸ்டு 31, 2008 அன்று ஸ்ரீபாரதீய வித்யா பவன், மைலாப்பூரில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் இந் நிகழ்ச்சிக்கு முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன், பேராசியர் டாக்டர் மறைமலை இலக்குவனார் மற்றும் கலைமாமணி வானொலி அண்ணா கூத்தபிரான் ஆகியோர் கலந்த கொண்டு வாழ்த்துரை…
ஸ்ரீபத்மகிருஷ் 2007 – அறக்கட்டளை தொடக்கம்
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று, எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது. என் அப்பா ‘கிருஷ்ணமூர்த்தி’, அம்மா ‘பத்மாவதி’ இருவரின் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற பெயரை உருவாக்கினோம். பத்மாவதி-கிருஷ்ணமூர்த்தி இருவரின் பெயரின் சுருக்கமே ஸ்ரீபத்மகிருஷ். PADMAVATHY-KRISHNAMURTHY = SRI PATHMAKRISH காம்கேர் நிறுவனம்…
ஸ்ரீபத்மகிருஷ் – நோக்கம்
காம்கேர் நிறுவனம் தொடங்கியதில் இருந்தே மாற்றுத்திறனாளிகள் பலர் எங்களிடம் ஏதேனும் உதவி கேட்டு வந்துகொண்டே இருந்தனர். என் திறமைக்கும் அறிவுக்கும் மதிப்பளிக்கும் இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என ஏதேனும் ஒரு விதத்தில் உதவுவது என்பதை நோக்கமாகக் கொண்டோம். அதன்…
அறக்கட்டளை
என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில் 40 வருட காலம் கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்து படிப்படியாக முன்னேறி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள். தாய் திருமதி பத்மாவதி, Senior Telephone Supervisor ஆகவும், தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி Sub Divisional Engineer ஆகவும் பணியாற்றினார்கள். எனக்கு ஒரு தங்கை…