இங்கிதம் பழகுவோம்[10] பெண்ணே உன் சக்தி உன் மனதில்தான்! (https://dhinasari.com)
1992-ம் ஆண்டு எம்.எஸ்.ஸி முடித்து சென்னை வந்து சொந்தமாக காம்கேர் நிறுவனத்தை ஆரம்பித்த காலத்தில் இரண்டு கம்ப்யூட்டர்களையும், இரண்டு பெண் அலுவர்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தேன். என் கனவு இலட்சியம் எல்லாமே சொந்தமாக நிறுவனம் தொடங்கி, அதில் பெண்களை மட்டுமே பணிக்கு அமர்த்தி, முழுமையாக நூறு சதவிகிதம் பெண்களால் இயங்கக் கூடிய நிறுவனமாக்க…
இங்கிதம் பழகுவோம்[9] எளிமை கண்டு ஏளனம் வேண்டாம்! (https://dhinasari.com)
ஒரு முறை என் அம்மாவுக்கு பல் சம்மந்தமான மருத்துவ ஆலோசனைக்கு டாக்டரிடம் அப்பாவுடன் சென்றிருந்தார். நானும் சென்றிருந்தேன். அம்மாவின் பல் பரிசோதனை முடிவதற்குள் அம்மா பற்றிய சிறிய அறிமுகம். அம்மா மிகுந்த தைரியசாலி. எதையும் ஆராய்ந்து அறிந்து முடிவெடுக்கும் பக்குவம் கொண்டவர். 40 ஆண்டுகாலம் தொலைபேசித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த காலத்தில் பெண்களுக்கு…
இங்கிதம் பழகுவோம்[8] பாசத்தைப் பகிரலாமே! (https://dhinasari.com)
சென்ற வாரம் நெருங்கிய உறவினரின் பீமரத சாந்திக்கு (70 வயது நிறைவு) அப்பா அம்மாவுடன் சென்றிருந்தேன். வழக்கம்போல தாத்தா பாட்டிகள் என் நலன் விசாரிக்க, என் வயதை ஒத்தவர்கள் ‘செளக்கியமா?’ என்று கேட்டு நகர அப்பா அம்மா முன்னே சென்று அமர என் கையைப் பிடித்து இழுத்து பக்கத்து நாற்காலியில் அமர வைத்தார் ஒரு பாட்டி….
இங்கிதம் பழகுவோம்[7] விருந்தும் கசக்கும்! (https://dhinasari.com)
பெரும்பாலும் 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே நம் எல்லோருக்குமே ஏதேனும் ஒரு காரணத்தால் உடல் உபாதைகள். தீய பழக்க வழக்கங்கள் இருந்தால் 50 வயதில் வரும் உபாதைகள் 30 வயதிலேயே வந்துவிடும். அவ்வளவுதான். உரம் ஏற்றிப் பயிரிடப்படும் காய்கறிகள் உட்பட நாம் சாப்பிடும் அனைத்துப் பொருட்களிலும் இராசயனக் கலப்பிடம். மாசு கலந்த காற்று. தூய்மையில்லாத தண்ணீர்….
இங்கிதம் பழகுவோம்[6] மனமே சாட்சி! (https://dhinasari.com)
சென்ற வருட தீபாவளித் திருநாள். மழை பெய்து ஓய்ந்திருந்தது. தொலைக்காட்சியில் ஏதோ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. லேப்டாப்பில் என் பணிகளை செய்துகொண்டு, நடுநடுவே ஃபேஸ்புக் படித்துக்கொண்டு, தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென ‘ஃபேஸ்புக் சாட் விண்டோவில் மேடம், தீபாவளி வாழ்த்துக்கள். என்னை நினைவிருக்கிறதா? நான் உங்க கம்பெனில வேலை செய்திருக்கேன்…’ என தகவல் வந்து விழுந்தது. அப்போதுதான் சாட்…
இங்கிதம் பழகுவோம்[5] துறக்க வேண்டியதை துறப்போமே! (https://dhinasari.com)
நேற்று ஒரு இளைஞர் போன் செய்திருந்தார். தன் பெயர் ஊர் போன்றவற்றை அறிமுகம் செய்துகொண்டு நான் எழுதிய கம்ப்யூட்டர் புத்தகங்களை நிறைய படித்திருப்பதாகவும் மிகவும் எளிமையாக இருப்பதாகவும் சொல்லி பேச்சைத் தொடங்கினார். மேலும், தானும் கம்ப்யூட்டர் கட்டுரைகள் எழுதி வருவதாகவும் அவை சில கம்ப்யூட்டர் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் சொல்லிய அவர் குரலில் மெல்லிய தாழ்வு…
இங்கிதம் பழகுவோம்[4] அழியாத ஆட்டோகிராஃப் (https://dhinasari.com)
என் நிறுவனத்தின் லைப்ரரிக்கு புதிதாக புக் ஷெல்ஃப் தயாரிப்பதற்காக ஒரு கார்பென்டரை வரச் சொல்லி இருந்தோம். எங்கள் லைப்ரரியைப் பார்த்தவர் அசந்துபோய் ‘இத்தனை புத்தகங்களா…’ என அதிசயிக்க… நான் புத்தக ஷெல்ஃப் எப்படி இருக்க வேண்டும் என்ற மாடலுக்காக ‘இதோ இந்த ஷெல்ஃபை பாருங்க….’ என்று நான் எழுதிய புத்தகங்களுக்காக பிரத்யேகமாக வைத்திருந்த ஷெல்ஃபை காண்பித்தேன்….
இங்கிதம் பழகுவோம்[3] ரொம்ப பிசி (https://dhinasari.com)
ஒருசில பல்கலைகழகங்களில் நான் எழுதி எங்கள் காம்கேர் பப்ளிஷ் செய்துள்ள புத்தகங்கள் பாடதிட்டமாக உள்ளன. ஒருசில பல்கலைக்கழகங்களில் என்னிடம் கான்செப்ட் கொடுத்து எழுதி மட்டும் தரச் சொல்லியும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் என்னிடம் ஒரு புத்தகம் எழுதித்தர கேட்டார்கள். மாணவர்களுக்கு கல்வியுடன் வாழ்வியலையும் சொல்லித்தர வேண்டிய பொறுப்பில் இருக்கும் துறைத்தலைவர் என்னிடம் போனில் பேசிய…
இங்கிதம் பழகுவோம்[2] மேடை நிகழ்ச்சிகளின் சொதப்பல்கள் (https://dhinasari.com)
பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பேச்சாளர்களின் அறிமுக உரையை சொதப்பி விடுவார்கள். நான் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில் அனுபவம் அப்படித்தான்… சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் அறிமுகப்படுத்துவார்கள். என்னுடன் என் அப்பா வந்திருப்பார்… அவர்களாகவே கற்பனை செய்துகொண்டு ‘திருமதி புவனேஸ்வரி அவர் கணவருடன் வந்திருக்கிறார்’ என்பார்கள்… உடன் வந்திருப்பவர் குறித்து பேச வேண்டிய தேவையே இல்லாதபோதும்… கருப்பு கோட்…
இங்கிதம் பழகுவோம்[1] சுமக்க வேண்டியவற்றை சுமப்போம் (https://dhinasari.com)
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்… அடிக்கடி எனக்கு இந்தக் குறள் மனதுக்குள் வந்துபோகும்… துன்பம் செய்பவர்களுக்கு நன்மைகள் செய்தாலும், அவர்கள் நாணமெல்லாம் படுவதில்லை இந்தக் காலத்தில். ஏனெனில் பெரும்பாலானோருக்கு தாங்கள் செய்வது தவறு என்ற எண்ணமே இருப்பதில்லை. சிலர் தெரிந்தே தவறு செய்கிறார்கள். ஒரு சிலர் தாங்கள் செய்கின்ற தவறு தனக்கு…