கல்கி: கல்கி குழுமமும் காம்கேர் சாஃப்ட்வேரும் – 2021

2021 –ல் ஆன்லைன் கல்கி குழுமம் காம்கேருடன் ஒப்பந்தம்!

கல்கி குழுமத்தின் தலைமையில் இருந்து அலைபேசி அழைப்பு. ‘எங்கள் கல்கி குழுமத்துடன் இணைந்து தொழில்நுட்பப் பயணம் செய்ய முடியுமா? என கேட்டார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் உள்ளங்கையில் இருந்து விரல் நுனிக்கு வந்துள்ள இந்த காலகட்டத்தில் கல்கி குழுமமும் தன் வாசகிகளை பில்கேட்ஸாக்கும் பொருட்டு ‘ஸ்மார்ட் லேடி’ என்ற தொழில்நுட்பத் தொடர், பிளாக், ஃபேஸ்புக்கில் வாசகிகளுடன் நேரடியாக உரையாடி தொழில்நுட்ப ஆலோசனைகள் கொடுத்தல், யு-டியூப் சேனல்களில் வாசகிகளின் வீடியோக்களை பதிவிடுதல் என அசுர வேகத்தில் வளர்ந்து இன்று பத்திரிகையையே ஆன்லைனில் கொண்டுவந்து அசத்தியுள்ளது.

இந்த சேவையில் இனி எங்கள் காம்கேரும் இணைந்துகொண்டுள்ளது என்பதுதான் பெரும் சிறப்பு. மாற்றங்கள் இனி முன்னேற்றமாகவே இருக்கும்.

முன்னேற்றங்கள் வெப்சைட்டில் மாற்றங்களுடன், மொபைலில் ஆப் வடிவத்துடன் வெளிவர காத்திருக்கின்றன. கல்கி குழுமத்தின் ஃபேஸ்புக் பேஜ், டிவிட்டர் பக்கங்கள், யு-டியூப் சேனல், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியா பக்கங்களும் புத்தம் புது வடிவில் தயார் ஆகிக்கொண்டிருக்கின்றன.

மேலும் ஆன்லைன் கல்கி குழுமத்தில் மங்கையர் மலரில் ‘விரல் நுனியில் உன் உலகம்’ என்ற கட்டுரைத் தொடரையும் எழுதி வந்தேன்.

கல்கிகுழுமத்தின் யு-டியூப் சேனலில் எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ வாயிலாக  இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக  திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தின் 6 நாட்களும் காபி வித் கல்கி (Coffee with Kalki), லஞ்ச் வித் மங்கையர் மலர் (Lunch With Mangayar Malar), குட் நைட் வித் குட்டீஸ் (Good Night with Kutties) என மூன்று தொடர்களை காலை ஏழு மணி, மதியம் ஒரு மணி, இரவு ஏழு மணி என மூன்று வேளையும் வெளியிட்டு வாசகர்களின் கண்களுக்கும் மனதுக்கும் விருந்தளித்து வந்தோம்.

2014 கல்கி குழும லோகோ வடிவமைப்பில்!

கல்கி பத்திரிகையின் அளவிலும் கல்கிக் குழுமத்தின் லோகோவிலும்  மாற்றங்கள் செய்தபோதுதான் லோகோ வடிவமைப்பு சம்மந்தமாக கல்கி குழும நிர்வாகத்தினர் என்னை தொடர்புகொண்டார்கள்.

அந்த காலகட்டத்தில் (2013-2014) எங்கள்  ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ மூலம் மங்கையர் மலர் பத்திரிகைக்கு முழுமையான தொழில்நுட்ப ஆலோசகராக இருந்து வந்தேன். காம்கேரும் மங்கையர் மலரும் இணைந்து வாசகர்களுக்கு ஏராளமான தொழில்நுட்ப கருத்தரங்குகளையும், போட்டிகளையும் ஆன்லைனிலேயே நடத்தி வந்தோம்.

மேலும் மங்கையர் மலரில் ‘ஸ்மார்ட் லேடி’ என்ற தலைப்பில் பெண்கள் அனைவரையும் ஜூனியர் பில்கேட்ஸாக்கும் முயற்சியில் தொழில்நுட்பக் கட்டுரைத் தொடர் எழுதி வந்தேன்.

எங்கள்  ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ மூலம் மங்கையர் மலருக்காக பிளாகையும் (http://mmsmartlady.blogspot.in), யு-டியூப் சேனலையும் (https://www.youtube.com/user/mmsmartlady), ஃபேஸ்புக் பக்கத்தையும் (https://www.facebook.com/mm.smartlady) அறிமுகப்படுத்தி அதன் மூலம் வாசகிகளுடன் வாரந்தோறும் ஆன்லைனில்  ‘சாட்-மீட்டிங்’ செய்து தொழில்நுட்பம் குறித்து விவாதித்து அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து, தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகள் நடத்தி, பரிசுகள் கொடுத்து உற்சாகப்படுத்தி மங்கையர் மலர் வாசகிகளுடன் இணைப்பில் இருந்தேன்.

 

2014-ம் ஆண்டு கோகுலம் ஆங்கில இதழில்!

கோகுலம் ஆங்கில பதிப்புகளில்  ‘லாஜிகா-Logica’ என்ற தலைப்பில்  சிறுவர் சிறுமிகளுக்கான குவிஸ் பகுதியை ஒரு வருட காலம் எழுதி வந்தேன்.

2013-ம் ஆண்டு மங்கையர் மலரில் ‘ஹாய் கம்ப்யூட்டர்’!

2013-ம் ஆண்டு மங்கையர் மலரில் ‘ஹாய் கம்ப்யூட்டர்’ தொடரை ஆறுமாத காலம் எழுதி வந்தேன்.

2004-2005 டாப் 10 மனிதர்களில் ஒருவராக!

அந்த காலகட்டத்தில் ஆன்லைனில் அடி எடுத்து வைத்திருந்த கல்கி குழும வெப்சைட்டின் முகப்புப் பக்கத்தில் ‘டாப் 10’ மனிதர்களின் புகைப்படத்துடன் என் புகைப்படத்தையும் வெளியிட்டு பெருமைப்படுத்தினார்கள்.

2004-ம் ஆண்டு மினிகல்கியில் தனியாவர்த்தனம்!

‘காசு கொட்டும் மல்டிமீடியா’ என்ற தலைப்பில் மினி கல்கி-யில் தனியாவர்த்தனம் செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. தனி புத்தகமாக மினிகல்கியில் என் பங்களிப்பைக் கொடுத்ததிலும் அளவிலா மகிழ்ச்சி.

1996 – ல் முதன் முதலாக பெண்கள் மாத இதழில் தொழில்நுட்பக் கட்டுரைத் தொடர்!

மங்கையர் மலரில் பெண்களுக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தலாம் என்று நான் எழுதி போஸ்ட் செய்திருந்த ஒரு கடிதத்துக்கு மதிப்பளித்து என்னை அழைத்துப் பேசி ‘தலைப்பு முதல் தொடரை எழுத வேண்டிய காலகட்டம் வரை’ நானே முடிவு செய்யும் சுதந்திரத்தை எனக்களித்தது மங்கையர் மலர்.

மங்கையர் மலரில் ‘உலகம் உன் கையில்’ என்ற தலைப்பில் தொழில்நுட்பக் கட்டுரைத் தொடரை 1 வருட காலம் எழுதி வந்தேன். அதுவே கல்வி சம்மந்தமாக தமிழில் வெளியான முதல் தொழில்நுட்பக் கட்டுரைத்தொடர். மேலும், ஜனரஞ்சகமான பெண்கள் மாத இதழில் நான் அறிந்த வகையில் முதன்முதலில் வெளியான தொழில்நுட்பக் கட்டுரைத்தொடரும் அதுவே.

என் 10-வது வயதில்…

நான் எழுதிய ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கதை கோகுலம் (தமிழ்) பத்திரிகையில் வெளியானது. அதுவே என் முதல் கதை.

(Visited 44 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon