கொஞ்சம் யோசிக்கலாம் வாங்க!

பாராட்டுகளை மட்டும்
பக்கம் பக்கமாக இருந்தாலும்
பார்த்துப் பகிர்ந்து பெருமைப்படும்
நம் மக்கள்
பேசி தீர்க்க வேண்டியப்
பிரச்சனைகளுக்கு
ஒரிரு வார்த்தைகளுக்கு
மேல் கேட்கக் கூட
பொறுமை இல்லாமல்
To the Point
பேச விரும்புவது விசித்திரம்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare Software
பிப்ரவரி 7, 2022 | திங்கள் | இந்திய நேரம் காலை 6 மணி

எல்லோருக்கும் பேசுவதற்கு
நிறைய விஷயங்கள்
இருக்கின்றன
ஆனால்
சொல்வதற்குதான்
எதுவும் இல்லை!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare Software
பிப்ரவரி 4, 2022 | வெள்ளி | இந்திய நேரம் காலை 6 மணி

புத்தகங்களே அழகுதான்!
அதிலும்…
புத்தகத்தை குறுகுறுவென
பார்த்துப் படிக்கும்
குழந்தைகளின் கண்களும்
அடங்காத புத்தகத்தை
அணைத்துப் பிடிக்கும்
பிஞ்சு கைகளும்
பார்க்கப் பார்க்கப் பேரழகு!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare Software
பிப்ரவரி 3, 2022 | வியாழன் | இந்திய நேரம் காலை 6 மணி

எதையும் தாங்கும் சக்தியும்,
எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றலும்
இயற்கையாகவே நம் எல்லோருக்கும் இருக்கிறது.
அவற்றை எப்படி கையாள்கிறோம்
என்பதில்தான் சூட்சுமம்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare Software
பிப்ரவரி 2, 2022 | புதன் | இந்திய நேரம் காலை 6 மணி

விமர்சனத்துக்கும்
வியப்பிற்கும்
இடையில்தான்
வாழ்க்கை
ஓடிக்கொண்டிருக்கிறது!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare Software
பிப்ரவரி 1, 2022 | செவ்வாய் | இந்திய நேரம் அதிகாலை 6 மணி

பூமியில் அமர்ந்து பார்க்கும்போது
வானத்து நட்சத்திரங்கள் அழகு!
வானத்தில் பறக்கும்போது
பூமியின் வீடுகள் சொர்க்கலோகம்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare Software
ஜனவரி 31, 2022 | திங்கள் | இந்திய நேரம் அதிகாலை 6 மணி

பெரும்பான்மையினோரின்
கருத்துக்களைப் பிடித்தமானதாகக்
காட்டிக் கொள்ளவில்லை என்றால் தன்னை
கூட்டத்தில் இருந்து விலக்கி
வைத்து விடுவார்களோ
என்ற பயத்தில்தான் பெரும்பான்மையினர்
தங்கள் தனித்துவத்தை இழந்து
கூட்டத்துக்குள் ஐக்கியமாகிறார்கள்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare Software
ஜனவரி 30, 2022 | ஞாயிறு | இந்திய நேரம் அதிகாலை 6 மணி

(Visited 220 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon