விகடகவி – APP Magazine : ‘நேசித்தப் புத்தகம்’ (October 9, 2021)

அக்டோபர் 9, 2021 விகடகவி App Magazine-ல் வாசிக்க!

நான் எழுதி NCBH குழுமப் பதிப்பகம் மூலம் வெளியான  ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற புத்தகம் குறித்து விகடகவியில் வேங்கடகிருஷ்ணன் அவர்கள் எழுதியது…

புத்தகம் வேண்டுவோர் compcare@hotmail.com இமெயில் முகவரிக்கு இமெயில் அனுப்பவும்!

காம்கேர் கே புவனேஸ்வரி  அவர்களை நேரில் எங்களுடைய புக் எக்சேஞ்ச் கண்காட்சிக்காக சந்தித்தபோது, அவர் தந்த ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. அணுக மிகவும் எளியவராகவும், நிறைய விஷயங்கள் தெரிந்தவராகவும் இருந்தார். வாத்தியார் சுஜாதாவுக்கு பின் எளிய முறையில் கம்ப்யூட்டர், ஆன்லைன் போன்ற விவரங்களை வழங்குபவராக நான் இவரை பார்க்கிறேன். அதனாலேயே எனக்கு இவருடைய எழுத்து மிகவும் பிடிக்கும்.

அவங்களோட புத்தகம் இது விகடன்ல எல்லோரும் சுலபமா புரிஞ்சுக்கற மாதிரி கம்ப்யூட்டர் பத்தி எழுதும்போது படிக்க ஆரம்பித்தேன்.

இந்தப் புத்தகம் 2018-ல் வெளிவந்தது. NCBH குழுமப் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டிருந்தார்கள். அப்பவே நிறைய அட்வான்ஸ் விஷயங்கள்தான் ரொம்ப எளிமையாக சொல்லி இருந்தாங்க.

புத்தகத்தின் முன்னுரையிலேயே தெளிவாக சொல்லிவிடுகிறார். இது ஆன்லைன் ஜாப் என்ற பொய்யான மயக்கும் திட்டம் எதுவும் கிடையாது, இது உங்களிடம் இருக்கும் திறமையையும், நேரடியாக நீங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலையும், ஆன்லைன் மூலமாக ஈடுபடுத்தி பிரபலப்படுத்த உதவும் ஆலோசனைகள் மட்டுமே என்று அவர் சொல்றது, இதில் மயங்கி ஏமாறுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அதே நேரம் சரியாக நமது திறமையை உபயோகப்படுத்தினால், ஆன்லைனில் நிறைய வாய்ப்புகள் உண்டு என்று புரிய வைத்ததும் இந்த புத்தகம். தமிழ் இந்து நாளிதழில் இது இணைப்பாக, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என்ற தலைப்பிலேயே ஞாயிறுதோறும் வந்தபோது… நான் அதை விரும்பிப் படித்திருக்கிறேன். அதுவே புத்தகமாக வரும்போது, அவருடைய எளிமைக்கு ஒரு சான்றாக அந்த தலைப்புகள் அமைந்தன.

இமெயிலே நம் இனிஷியல், இணையவெளியில் வடாம் போடலாம், புது அலுவலகத்துக்கு பூஜை போட தயாரா? வாடகை இடத்தை விற்கலாமா? பத்திரிகை நடத்தலாம் வாங்க, உங்கள் பெயரில் இலவச டிவி, இது போன்ற தலைப்புகள் புத்தக அட்டையைத் திருப்பியவுடன் எவரையும் கவர்ந்து விடும்.

இதில் இவர் சொல்லி இருக்கிற நேரில் பார்க்காமலேயே மீட்டிங், தற்போது நியூ நார்மல் என்று சொல்லக்கூடிய வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்டது. இந்தப் புத்தகத்தை 2018 வருடம் வெளியிட்டார். இந்த நான்கு வருடங்களிலேயே ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையை தெரிந்து கொள்ள உதவுவது இந்தப் புத்தகம் தான். எனக்கு என்றைக்கும் ஒரு reference guide ஆக நான் இதை உபயோகப் படுத்துகிறேன்.

இந்தப் புத்தகம் இன்றைய சூழலில் ஒரு நண்பன், வரப்பிரசாதம். குறிப்பாக இணையவெளியை அணுகத் தயங்கும் பெண்களுக்கு. அங்கு ஒரு மாபெரும் மார்க்கெட் இயங்கிக் கொண்டிருக்கிறது, நீங்களும் ஒரு மூலையில் கடை போட, உங்கள் திறமையை வெளிப்படுத்த, பணம் சம்பாதிக்க, இது பெரிய வகையில் உதவும். இதன் மூலம் புவனேஸ்வரி அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கலாம் என்று நினைக்கிறேன், இன்றைய சூழலில் மாறியோ அல்லது முன்னேறியோ இருக்கும் வசதிகளை குறித்து “வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் -பாகம் 2” வெளியிடவேண்டும்.

எழுதியவர்: வேங்கடகிருஷ்ணன்
அக்டோபர் 9, 2021

(Visited 1,283 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon