போட்டோஷாப்


பூஸ்ட்டர்!

கொரோனாவில்  இருந்து  நம்மை பாதுகாத்துக்கொள்ள மட்டுமல்ல, வாழ்க்கையின்  உயிர்ப்புக்கும் பூஸ்ட்டர் அவசியம்.

நேற்று பெங்களூரில் இருந்து 72 வயது வாசகர்  ஒருவர் வாட்ஸ் அப்பில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு போட்டோஷாப் CC 2021 எழுதி விட்டீர்களா? வெளியிட்டிருந்தால் அந்த புத்தகம் வேண்டும் ஆன்லைனில் பேமண்ட் செய்கிறேன் என்று கேட்டிருந்தார்.  ஏற்கெனவே என்னுடைய நிறைய புத்தகங்களை  வாங்கி இருக்கிறார் என்பதால் எனக்கு நினைவில் இருந்தது பெங்களூர். அவர் நகை வியாபாரம் செய்பவர் என்பதும் நினைவில் இருந்தது. ஒருவர் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பும் தொனியை வைத்தே இன்னார் என அவர்களை நினைவில் கொண்டு வந்துவிட முடிகிறது. ஆனால் மொபைல் எண்ணை பதிவு செய்யாததால் பெயர் நினைவில் இல்லை. கேட்டறிந்தேன்.

அதன் பிறகு நடந்த எங்கள் உரையாடல் என் உழைப்புக்கான பூஸ்ட்டர்!

He: ‘I have all your books, I am 72 years Old’

Me: ‘Is that Photoshop Book is for you or your Juniors in your Family?’

He: ‘It is for me mam’

Me: Wow, Super. I Think you are Diamond or Gold Merchant, if My remembrance is correct.

He: Yes Madam. Your Memory is super.

Me: Very Glad that you are having all my books.

He: Thx Madam. Due to covid I am using my time in learning music and enhancing my computer knowledge. Particularly Photoshop.

புத்தகம் அவருக்கா அல்லது அவர்கள் வீட்டு இளைஞர்களுக்கா என கேட்டதற்கு தனக்குத்தான் என்றும், கொரோனா காலகட்டமாக இருப்பதால் காரணமாக வீட்டில் இருந்தே இசையிலும், கம்ப்யூட்டரிலும் குறிப்பாக போட்டோஷாப்பிலும் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி எனது 150 புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என் இணையதள லிங்கையும் கொடுத்தேன், எந்த புத்தகம் வங்காமல் விடுபட்டிருக்கிறதோ அவற்றை வாங்கிக்கொள்ளுங்கள் என்ற குறிப்புடன்.
https://compcarebhuvaneswari.com/?p=10483

72 வயதுக்கு இவரே என்னுடைய நூல்களை வாசிக்கிறார் என்றால் இவரது அடுத்தடுத்த தலைமுறையும் நிச்சயம் வாசிக்கும் என்ற மனநிறைவுடன் அவரது வாட்ஸ் அப் புரொஃபைல் புகைப்படம் பார்த்தேன். தன் பேத்தியுடன் இயற்கை சூழலில் நடந்து சென்று கொண்டிருக்கும் புகைப்படம். கைபிடித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். வாட்ஸ் அப்பில் அந்தக் குழந்தையின் பெயரைக் கேட்டறிந்தேன்.

நடத்தி அழைத்துச் செல்லும் அவரால், தனது வாசிப்பின் சுவாசத்தையும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் அந்தக் குழந்தைக்குள் கடத்திவிட முடியாத என்ன?

நிச்சயம் முடியும். தலைமுறை தாண்டியும் என்  எழுத்தின்  வாசம்! நேற்று எனக்கு மிக மகிழ்ச்சியான நாள்!

புகைப்படமும், ஸ்கிரீன் ஷாட்டும்: என் வாசகரின் அனுமதி பெற்றது.

– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜனவரி 7, 2022

(Visited 26 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon