#கவிதை: வாழ்நாள் பரிசும், விருதும்!

வாழ்நாள் பரிசும், விருதும்!

நம் அனைவருக்குமே
வாழ்நாள் பரிசும் உண்டு
விருதும் உண்டு!

அவை எப்படி இருக்க வேண்டும்
என்பதைக் கூட
நாமே நிர்ணயிக்கலாம்
நாமே வடிவமைக்கலாம்
அதுதான் அதன் மாசிறப்பு!

இன்று நாம்
வாழும் வாழ்க்கை
நேற்று நாம்
வாழ்ந்த வாழ்க்கைக்குக்
கிடைத்த பரிசு!

நாளை நாம்
வாழப் போகும் வாழ்க்கை
இன்று நாம்
வாழும் வாழ்க்கைக்குக்
கிடைக்க இருக்கும் விருது!

பரிசோ, விருதோ
எல்லாமே நாம் வாழும்
வாழ்க்கையில்
நம் வாழ்க்கைப் பாதையில்
நாம் தூவிச் செல்லும்
நல்வினை தீவினையைப்
பொருத்தே!

யாரையும் கைகாட்டவோ
குறைசொல்லவோ முடியாது
எல்லாமே
நம் எண்ணம்
நம் சொல்
நம் செயல்!

நேற்றை மாற்ற இயலாது
நாளையையும் கணிக்க இயலாது
இன்றை நம்மால் செதுக்க முடியும்
அது ஒன்றே சாஸ்வதம்!

இன்றில் இருந்து
இந்த நிமிடத்தில் இருந்து
இந்த நொடியில் இருந்து
மாற வேண்டியதில் மாறுவோம்
மாற்ற வேண்டியதை மாற்றுவோம்!

மாறவும் முடியவில்லை
மாற்றவும் முடியவில்லையா
பிறருக்கு
தொந்திரவு கொடுக்காமல்
ஒதுங்கி நின்று
வாழப் பழகுவோமே!

2022-ஐ உற்சாகமாக வரவேற்போம்!
Welcome 2022! Welcome!

காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 1, 2022

#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai

(Visited 1,255 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon