#கவிதை: இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான்!

இந்தக் காலத்துப் பிள்ளைகளே
இப்படித்தான் என
அங்கலாய்ப்பவர்களா நீங்கள்
அப்போ உங்களுக்குத்தான்
இந்தக் கவிதை!

மொட்டை மாடி
வாக்கிங் போது
காலை
ஏழு மணிக்கே
எதிர்வெயில்
வாட்டி எடுக்க
கிளம்பலாம் என
எத்தனித்தபோது…

எதிர்வீட்டு
மொட்டை மாடி
மத்திம வயது பெண்
வடாம் பிழிந்துகொண்டிருக்க…

அவர் முகத்தில் வெயில்படாதவாறு
அவருடைய மகன் நகர்ந்து நகர்ந்து நின்று
நிழல் கொடுத்துக்கொண்டிருக்கும் காட்சியை
ரசிக்கவே இன்னும் சில நிமிடங்கள்
நடக்கலாம் என முடிவெடுத்தேன்
நடக்க ஆரம்பித்தேன்…

தொளுக்கு மேல் வளர்ந்த
பிள்ளை தோழன்
ஆம்…
தோழனை விட உயர்வாய்
ஒரு மகனைக் கண்டேன்

பெருமிதமாய்
நடைப்பயிற்சியை
முடித்துக்கொண்டு
நிறைவாய்
கீழிறங்கினேன்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஏப்ரல் 23, 2022
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai

(Visited 17 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon