தொழில்நுட்ப_இங்கிதங்கள்

#தொழில்நுட்ப_இங்கிதங்கள்

மற்றவர்களின் பாராட்டை பெறுவது எப்படி? நான் என்ன செய்தாலும் பாராட்டு கிடைப்பதில்லையே என ஒருவர் கேட்டார்.

பாராட்டு பெறுவதெல்லாம் பெரிய விஷயமா? சின்ன சின்ன பண்பான செயல்களில் கூட மற்றவர்களை கவர முடியும்.

உதாரணத்துக்கு ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்புகிறீர்கள். ஏதோ ஒரு காரணத்துக்காக டெலிட் செய்கிறீர்கள். பின்னர் உங்கள் வேலையை கவனிக்கச் சென்று விடுகிறீர்கள். வாட்ஸ் அப்பில் deleted message என்ற தகவலைப் பார்த்தவர் மண்டையை உடைத்துக்கொண்டிருப்பார். என்னவாக இருக்கும்? என குழம்பி தவிப்பார். மிகவும் சென்சிடிவாக இருப்பவர்கள் மனதளவில் பாதிக்கப்படவும் செய்வார்கள்.

எப்போதெல்லாம் வாட்ஸ் அப்பில் நீங்கள் அனுப்பும் தகவலை டெலிட் செய்கிறீர்களோ அப்போதெல்லாம் ‘சாரி, வேறொருவருக்கு அனுப்ப வேண்டிய  தகவலை உங்களுக்கு அனுப்பி விட்டேன். அதனால் டெலிட் செய்தேன்’ என்றோ  அல்லது வேறு ஏதேனும் நியாயமான காரணத்தை சொல்லி தகவல் அனுப்பிப் பாருங்கள்.

உங்களுக்கு நேரடியாக பாராட்டு கிடைக்காவிட்டாலும் நீங்கள் டெல்ட் செய்து, சாரி சொல்லி தகவல் அனுப்பிய நபர் மனதில் உயர்ந்து நிற்பீர்கள்.

மனதளவில் சிறிய காயத்தை ஏற்படாமல் இருப்பதுகூட ஆகச் சிறந்த அறங்களுள் ஒன்று.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

பிப்ரவரி 22 |   செவ்வாய்

(Visited 464 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon