‘சின்னதா செஞ்சு பழக்கமே இல்லையே’ – ராக்கெட்ரி!

‘சின்னதா செஞ்சு பழக்கமே இல்லையே’ – ராக்கெட்ரி!

‘சின்னதா செஞ்சு பழக்கமே இல்லையே’ என சொல்லி ஆராய்ச்சிக் கூடங்களில் கலகலப்பாகத் தொடங்கும் நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை ‘I am a Rocket Scientist’ என போலீஸ்காரர்களின் அடி உதை சித்திரவதைக்கு நடுவிலும் சொல்லும் அவருடைய கம்பீரம் என திரைப்படம் நெடுக ஒவ்வொரு காட்சியும் நாட்டுப் பற்றை இழைத்துச் சென்றுள்ளது. Hats off to the Entire Team. குறிப்பாக நடிகரும் இயக்குனருமான மாதவன் அவர்களின் உழைப்புக்கும், முயற்சிக்கும் பிக் சல்யூட்!

அவர் தவறாக தேச துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும்போது அவருடன் பணி புரிந்த எந்த ஒரு விஞ்ஞானியும் அவரை வந்து சந்திக்கவில்லை. அது ஏன்? என சிபிஐ அதிகாரி கேட்கும்போது, ’ராக்கெட் கவிழ்ந்தால் எப்படி ரியாக்ட் செய்யணும்னு தெரிஞ்ச எங்களுக்கு மனிதர்கள் கவிழ்ந்தால் என்னபண்ணணும்னு தெரியலையோ என்னவோ’ என்று சொல்லும் காட்சி கிளாசிக்

நம்பி நாராயணன் அவர்களாக நடித்த மாதவனை சூர்யா நேர்காணல் செய்வதைப் போல தொடங்கும் திரைப்படம் முடிவடையும்போது நிஜ நம்பி நாராயணன் அவர்கள் பேசுவதைப் போன்ற காட்சியுடன் அமைந்திருப்பது அருமை.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 28, 2022 | வியாழன்

(Visited 212 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon