ஒப்பீடு!
ஒரு வாசகியின் போன் கால். ’இன்று ஒரு தகவல் போல நீங்க நல்லா எழுதறீங்க… ஆனா தென்கச்சி சுவாமிநாதன் ஐயா போல கொஞ்சம் காமெடியா இருந்தா நல்லா இருக்கும். ரொம்ப சீரியஸா சொல்றீங்க விஷயங்கள…’
‘நன்றி… யாரையும் யாரோடும் ஒப்பிடுவது சிறப்பாக இருக்காது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு டிஸைன். உங்களைப் போல் உங்கள் பிள்ளைகள் கூட வளர்வதில்லை… அப்படி இருக்கும் போது…’
‘சரிதாங்க, ஆனாலும்…’ என்றிழுத்தார்.
‘தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சீரியஸாக பேசி இருந்தால் எப்படி இருக்கும்?’
‘அவ்வளவு சுவாரஸ்யமா இருக்காதுங்க…’
‘அப்படித்தான் நான் ஜோவியலாக எழுதினாலும் சுவாரஸ்யமா இருக்காது…’
‘ம்…’
‘மேலும் அவர் சீரியஸான விஷயங்களை ஜோவியலா பேசினார்… நான் ஜோவியலான விஷயங்களையும் சீரியஸா பேசறேன். அவ்வளவுதான். இரண்டு பேருமே கசப்பான பாகற்காயை சாப்பிட வைக்க சீரியஸ், ஜோவியல் என்ற இரண்டு விஷயங்களை அதன் சதவிகிதத்தை கூட்டிக் குறைத்துப் பயன்படுத்துகிறோம். அவர் சீரியஸ் 30%, ஜோவியல் 70%. நான் சீரியஸ் 70%, ஜோவியல் 30%. தட்ஸ் ஆல்…’
யாரையும் யாரோடும் ஒப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. தனித்தனி பாதை என்பதை ஆழமாக வலியுறுத்திவிட்டு உரையாடலுக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
செப்டம்பர் 13, 2022 | செவ்வாய்