அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்!
யாரேனும் உங்கள் பழகும் பாங்கை பாராட்டினால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நன்றி சொல்லுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள், ‘என்னை எல்லோருக்கும் பிடிக்கும். பேசுபவர்கள் எல்லோரும் இப்படித்தான் சொல்வார்கள்’ என்று சொல்வதை தவிர்த்தால் பாராட்டுபவர்கள் மனதில் இன்னும் ஆழமாக வேரூன்றலாம். ஏனெனில் பொதுவாக எல்லோருக்குமே ஒரு விஷயம் நல்லதாக நடக்கிறது என்றால் அது தங்களுக்கு மட்டுமே நடப்பதாக நினைத்துக்கொள்ளும் வழக்கம் உண்டு. அப்படி இருக்கும்போது ‘பொதுவாகவே நான் இப்படித்தான். உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக நான் பேசவில்லை’ என்ற தொனியை தவிர்த்தால் எதிராளியை மகிழ்ச்சியாக இருக்க வைக்கலாம். நாமும் மகிழலாம்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 8, 2022 | சனிக்கிழமை
(Visited 14 times, 1 visits today)