நாங்கள் ஒன்றாக வசிக்கிறோம்!
குழந்தைகளை என்றாவது பெற்றோர்கள் ‘எங்கக் கூடத்தான் இருக்காங்க’ என்றோ, ‘நாங்கத்தான் பார்த்துக்கறோம்’ என்றோ, ‘நாங்கத்தான் வளர்க்கிறோம்’ என்றோ சொல்கிறார்களா அல்லது சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பிறகெதற்கு அப்பா அம்மாவுடன் வசிக்கும் வளர்ந்த பிள்ளைகள் மட்டும் ‘நான்தான் எங்க அப்பா அம்மாவை பார்த்துக்கறேன்’ என்றும் ‘என் கூடத்தான் இருக்காங்க’ என்றும் ஏதோ மூன்றாம் நபரைக் குறிப்பிடுவதைப் போல சொல்லிக்கொண்டு?
‘நாங்கள் எல்லோரும் சேர்ந்து வசிக்கிறோம்’ என்று சொல்வது எத்தனை அழகாக இருக்கிறது?
சொல்லிப் பாருங்கள். உங்கள் மனதில் நீங்களே பிரமாண்டமாய் உருவெடுப்பீர்கள். தன்னம்பிக்கை உச்சத்தைத் தொடும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 9, 2022, ஞாயிற்றுக்கிழமை
(Visited 700 times, 1 visits today)








