No சொல்வது சுலபம், ஆனால் எதிர்வினைகளை சமாளிப்பதுதான்…
நம்மால் முடியாத விஷயங்களையும், வேலைகளையும் பெருமைக்காகவும், நட்புக்காகவும், முக தாட்சண்யத்துக்காகவும் வலிய எடுத்து நம் தலையில் வைத்துக்கொண்டு திண்டாடுவதைவிட No சொல்வது சாலச் சிறந்தது.
No சொல்லப் பழகுவது கஷ்டம்தான். ஆனால் கொஞ்சம் முயன்றால் பழகிவிடலாம்தான்.
ஆனால், ‘மழை விட்டாலும் தூவானம் விடவில்லை’ என்பதைப் போல அதன் பிறகுதானே பனிப்போர் ஆரம்பம்.
யார் யாரிடம் No சொல்கிறோமோ அவர்களிடம் இருந்து நேரடியாகவும், அவர்கள் மற்றவர்களிடம் சொல்லும் விமர்சனங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் எதிர்வினைகளையும் சமாளிப்பதுதான் கடினம். அதை எதிர்க்கொள்ளப் பழகுவதுதான் சிரமத்திலும் சிரமம்.
ஒரு விஷயத்தைப் பழகும்போதே அதற்குப் பிறகு அதைச் சார்ந்து நடக்கும் எதிர்வினைகளையும் எதிர்கொள்ள சேர்த்துப் பழக வேண்டும். இல்லை என்றால் No சொல்ல முடியாமல் நம் தலையில் எடுத்து வைத்துக்கொண்டு புழுங்குவதும் ஒன்றுதான், No சொல்லிவிட்டு எதிர்வினைகளால் மனம் துன்பப்பட்டு புழுங்குவதும் ஒன்றுதான்.
நாம் பழகுவதுடன் நம் பிள்ளைகளுக்கும் சேர்த்தே இதை பழக்குவோம்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 11, 2022 | செவ்வாய்