முதல் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்கள் புத்திசாலியாக இருக்கிறார்கள்.
தான் எழுதிய கவிதைகளை இ-புத்தகமாக (Ebook) வெளியிட விரும்பிய பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒவ்வொரு கவிதையின் கீழும் அவர் பெயர் வேண்டும் என்றார். புத்தகமே உங்களுடையதுதானே? புத்தக அட்டையில் உங்கள் பெயர் வருகிறது. முகப்புப் பக்கத்திலும் வருகிறது. பிறகெதற்கு ஒவ்வொரு கவிதையின் கீழும் என்றேன். ‘யாரேனும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து படித்ததில் பிடித்ததாக்கினால் என் பெயராவது வரட்டுமே, அதனால்தான்’ என்றார். அதுவும் சரிதான் என சொல்லி அவர் சொல்லியபடி அவரது ஒவ்வொரு கவிதையின் கீழும் அவர் பெயரை வெளியிட்டு இ-புத்தகமாக வெளியிட்டுக் கொடுத்தோம்!
அவருக்கு கடந்த 3 மாதங்களில் 6 கவிதை நூல்களை இ-புத்தகமாக (Ebook) வெளியிட்டுக்கொடுத்தோம். ஒவ்வொரு நூலிலும் ஐம்பது கவிதைகள். ஒவ்வொன்றின் கீழும் அவர் பெயர்! அவர் செய்வது நியாயமாகத்தானேபடுகிறது?
நீங்களும் இபுத்தகம் வெளியிட வேண்டுமா? வாட்ஸ் அப்: காம்கேர் சாஃப்ட்வேர் : 9444949921
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 18, 2022 | செவ்வாய்