நோக்கமும், கான்செப்ட்டும் சரியாக இருந்தால் போதுமே!
நேற்று ஒரு திருத்தணி கல்லூரியில் இருந்து தமிழ்த்துறை பேராசிரியர் ஒருவர் பேசினார்.
அவருக்கு வேண்டிய தகவலை என்னிடம் இருந்து பெற்றதும், ’மேடம் நீங்க ஹார்லிக்ஸ், பூஸ்ட் மாதிரி…’ என்றார்.
‘என்ன சொல்றீங்க… புரியலை?’ என்றேன் குழப்பத்துடன்.
‘பிராண்டுங்க… ஹார்லிக்ஸ், பூஸ்ட் போல நீங்களும் ஒரு பிராண்டுங்க…’ என்றார் சிரித்துக்கொண்டே.
அவரவர் பாஷையில் புரிந்துகொள்ளலும், வெளிப்படுத்தலும். எப்படி ஒப்பிட்டால் என்ன? இதுவும் நன்றாகத்தானே இருக்கிறது. கான்செப்ட்டும் நோக்கமும் சரியாக இருந்தால் சரிதான்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 19, 2022 | புதன்
(Visited 239 times, 1 visits today)