வெர்ச்சுவல் பாராட்டு!
முன் குறிப்பு:
மொபைல் ஆப்களை இன்ஸ்டால் செய்யும்போதோ அல்லது பயன்படுத்தும்போதோ அவை நம்மிடம் இருந்து நம் தகவல்களை எடுத்துக் கொண்டு அதற்கு நம்மிடம் ஒப்புதல் பெற்ற பிறகே செயல்பட ஆரம்பிக்கும். ஆகவே, கண்களில்படும் அத்தனை ஆப்களையும் உங்கள் கண்முன் கடைவிரித்து ஆசை காட்டும் ஆப்களையும் விட்டில் பூச்சிகளாய் பயன்படுத்த முனையாதீர்கள். அத்தியாவசிய ஆப்களை மட்டும் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அதுதான் உங்கள் தகவல்களுக்கான பாதுகாப்பு. இந்தப் பதிவில் நான் சொல்ல வந்திருப்பது உளவியல் சார்ந்த விஷயம். எனவே இது எந்த ஆப்பில் கிடைத்தது என கேட்காதீர்கள். ஆப்களை கையாளும்போது கவனம். நன்றி!
இது ஒரு APP கொடுத்த பாராட்டு சான்றிதழ் (😀). வெர்ச்சுவலாக இருந்தாலும் படிக்கும்போதே ‘ஆஹா’ என்றிருக்கிறதல்லவா? உங்களுக்கும்கூட இதுபோலதான், இல்லை இல்லை இதைவிட அதிகமான புகழ்ச்சியுடன் கூடிய சான்றிதழ் கிடைக்கலாம். ஆனால் அதில் ஒரு சுகம் கிடைக்கிறதல்லவா?
நமக்கு சம்மந்தமே இல்லாத உயிரும் உணர்வும் இல்லாத ஒரு டிஜிட்டல் ஆப் நம்மிடம் இருப்பதாக சொல்லும் நல்ல குணங்களை கேட்கும்போதே சிலிர்ப்பாக உள்ளதே…. உண்மையிலேயே நாம் நல்லவராகவும் வல்லவராகவும் இருந்துவிட்டால் அது எத்தனை சந்தோஷமாக இருக்கும். மன ஆரோக்கியத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் வித்திடும்.
இதுவரை இந்த கோணத்தில் யோசிக்கவில்லை எனில் இனியாவது….
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 3, 2022 | வியாழன் கிழமை