அமைதி Vs ஆக்ரோஷம்!
அமைதியான சுபாவம் உடையவர்களுக்குத்தான் நேரடி / மறைமுக எதிரிகள் அதிகம் உருவாவார்கள். காரணம், அவர்கள் மீது தாங்களாகவே ஒரு சாஃப்ட் கார்னரை உருவாக்கி வைத்துக்கொண்டு அவர்களை ஏதேனும் ஒரு விஷயத்துக்காக அணுகி அவர்கள் தங்கள் கருத்தை மிக உறுதியாக சொல்லும்போது அல்லது மறுக்கும்போது சண்டைக்கோழிகளாக வலம் வருபவர்களைக்கூட ஏற்றுக்கொள்ளும் இந்த சமூகம் அமைதியாக வலம் வருபவர்களைவிட்டு வெகுதூரம் ஒதுங்கிச் செல்லும் அல்லது வெறுத்து ஒதுக்கும் அல்லது புறம் பேசும். மொத்தத்தில் காயப்படுத்தும்.
இதுவரை கவனிக்கவில்லை எனில் இனி கவனித்துப் பாருங்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 3, 2022 | வியாழன் கிழமை
(Visited 942 times, 1 visits today)








